ரிட்டையர்ட் வங்கி அதிகாரிகளுக்கு எஸ்பிஐ-யில் பணியிட வாய்ப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த முன்வந்துள்ளது. ஆலோசகர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிக்கான இந்த அறிவிப்பு, அனுபவம் வாய்ந்த வங்கி அதிகாரிகளுக்கு ஒரு நல்வாய்ப்பாகும்.
முக்கியத் தகவல்கள்:
-
பதவியின் பெயர்: FLC ஆலோசகர்கள் (246) மற்றும் FLC இயக்குநர்கள் (11).
-
மொத்த இடங்கள்: 257.
-
விண்ணப்பிக்கத் தொடக்கம்: பிப்ரவரி 5, 2026.
-
கடைசித் தேதி: பிப்ரவரி 26, 2026.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
-
வயது வரம்பு: 31.01.2026 தேதியின்படி 60 முதல் 63 வயதிற்குள் இருக்க வேண்டும். (01.02.1963-க்கு முன்னரோ அல்லது 31.01.1966-க்குப் பின்னரோ பிறந்திருக்கக் கூடாது).
-
தகுதி: பொதுத்துறை வங்கி அல்லது கிராம வங்கிகளில் Scale-I முதல் Scale-IV வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
-
கூடுதல் தகுதி: ஸ்மார்ட்போன் மற்றும் கணினியைத் தடையின்றி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் மற்றும் பணி விவரம்:
-
தேர்வாகும் நபர்கள் ஆரம்பத்தில் 1 வருடம் முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை பணியமர்த்தப்படுவார்கள்.
-
ஓய்வுபெற்ற பதவியின் அடிப்படையில், மாதம் ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பிக்கும் நபர்கள் அவர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டு (Shortlisted), நேரடியாக நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள். இதற்கான விவரங்கள் மின்னஞ்சல் (E-mail) மூலம் தெரிவிக்கப்படும்.
தகுதியுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.bank.in/ மூலம் விண்ணப்பிக்கலாம்.



