சூரியனை ஆராய ஏவப்படும் ஆதித்யா- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!

சூரியனை ஆராய ஏவப்படும் ஆதித்யா- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!

ந்திரயான் 3 திட்டம், விண்வெளி ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற நிலையில், அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைய உள்ளது ஆதித்யா எல்1 திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம் அதிலிருந்து வெளி வரும் காந்த புயல் தான். இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்து விடும் திறன் கொண்டதாகும்.

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா எல் 1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா எல்1 விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி 11.50 மணியளவில் ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது

Related Posts

error: Content is protected !!