இறுதி முயற்சி – விமர்சனம்!

இறுதி முயற்சி – விமர்சனம்!

மிழ்நாட்டில் கந்துவட்டிக் கொடுமையால் நிகழும் கொலைகள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்ததை அடுத்து கடந்த 14.11.2003 அன்று தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை 3 ஆண்டுகள் தான் என்பதாலும், ஆளுங்கட்சியினரின் ஆதரவு இருப்பதாலும் கந்து வட்டியை ஒழிக்க முடியவில்லை. இச்சூழலில் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி ரவுடி கூட்டத்திற்கு எதிராக சட்டம் இருந்தாலும் இதuவரை ஒருவர் கூட தண்டிக்கப் படாதது ஏன் என்ற கேள்வியையும், சந்தேகத்தையும் எழுப்பியபடி உருவாகியுள்ள படமே ‘இறுதி முயற்சி’. அதீதமான சோகமான காட்சிகளும், மெதுவாக நகரும் திரைக்கதையும் படத்தை சற்று தொய்வடைய செய்தாலும் கடன் தொல்லைக்கு தற்கொலை தீர்வல்ல என்று சொல்லி கவனம் பெற்று விடுகிறது. அதிலும் இந்த கதை கோவையில் டெக்ஸ்டைல் ஓனர் ஒருவரின் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட பத்திரிக்கை செய்தியை பார்த்து உருவானது என்று ஏற்கனவே இயக்குனர் கூறி இருக்கிறார். பத்திரிக்கையில் செய்தியாக படித்து பலரும் கடந்து சென்றிருக்கும் நிலையில் அந்தப் பாதிப்பை மக்களுக்கு ஒரு படிப்பினையாக அதனை தர வேண்டும் என்று முடிவு செய்து சாதித்துக் காட்டியதற்கும் தனி பூச்செண்டு வழங்கலாம்.

அதாவது ஹீரோ ரஞ்சித்ான் செய்து வந்த தொழிலுக்கக வாங்கிய கடன் தொகையை விட அதிகமாக வட்டி தொகை கட்டியும், கோடிக்கணக்கில் பணம் கேட்டு கந்துவட்டி மாஃபியாவால் மிரட்டப்படுவதோடு, அவரது குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் துன்புறுத்துகிறது. கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் ரஞ்சித்துக்கு எதுவும் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே, சென்னையில் தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளி ஒருவர், போலீசிடம் இருந்து தப்பி ரஞ்சித்தின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி விடுகிறார். இந்த நிலையில், கந்துவட்டி மாஃபியாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க, பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக ரஞ்சித் இறுதியாக ஒரு முயற்சியை மேற்கொள்கிறார். அது என்ன ? அதன் மூலம் அவரது பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா ? , அவரது வீட்டுக்குள் பதுங்கியிருக்கும் சைக்கோ யார் ? என்பதை, பாதிக்கப்பட்டவர்களின் மனதை தொடும் விதத்திலும், கஷ்ட்டமில்லாமல் வாழ கடன் வாங்கி அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை எச்சரிக்கும் விதமாகவும் சொல்வதே ‘இறுதி முயற்சி’ படக் கதை.