யுபிஐ மூலம் பணம் எடுக்க ‘யுபிஐ-ஏடிஎம்’ அறிமுகம்!- வீடியோ!

யுபிஐ மூலம் பணம் எடுக்க ‘யுபிஐ-ஏடிஎம்’ அறிமுகம்!- வீடியோ!

ம் நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் புரட்சியை ஏற்படுத்திய பிறகு, இப்போது நாட்டின் முதல் UPI ஏடிஎம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. UPI-ATM ஆனது வாடிக்கையாளர்களுக்கு எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்க வசதியான வழியை வழங்குகிறது தற்போது, பல வங்கிகள் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்குகின்றன. அதே வசதியைத்தான் இந்த யுபிஐ-ஏடிஎம் வழங்குகிறது. மற்ற வங்கிகள் வழங்கும் வசதி, மொபைல் மற்றும் ஓடிபி-ஐ அடிப்படையாக கொண்டது. ஆனால், யுபிஐ-ஏடிஎம் எந்திரமானது, க்யூஆர் கோட் மற்றும் யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் எடுப்பதை அடிப்படையாகக் கொண்டது.

இந்த யுபிஐ ஏடிஎம்-கள் பல இடங்களில் வைக்கப்பட்டவுடன், பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை ஏடிஎம்களுக்கு எடுத்துச் செல்வது குறைந்துவிடும்.

யுபிஐ-ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பது எப்படி என பார்ப்போம்.

1) முதலில், ஏடிஎம்-ல் இருந்து எடுக்க விரும்பும் தொகையை தேர்ந்தெடுத்து குறிப்பிட வேண்டும்.

2) பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட தொகைக்கான க்யூஆர் குறியீடு (QR code) திரையில் தெரியும்.

3) மொபைல் போனில் உள்ள யுபிஐ (UPI) செயலியை பயன்படுத்தி அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.

4) பின்னர் பணப் பரிவர்த்தனையை அங்கீகரிக்க மொபைலில் உங்கள் யுபிஐ பின் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

5) யுபிஐ பின் எண் அங்கீகரிக்கப்பட்டவுடன், ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும்.

error: Content is protected !!