எஸ்.பி.ஐ.,வங்கியில் அதிகாரிகள் பணியிடத்திற்கு, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

எஸ்.பி.ஐ.,வங்கியில் அதிகாரிகள் பணியிடத்திற்கு, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வங்கி, நாடு முழுவதும் காலியாக உள்ள 2,000 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை எழுத்துத்தேர்வு, நேர்காணல் வாயிலாக நிரப்பப்பட உள்ளது. வரும் செப்.,27ம் தேதி வரை ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பரில் முதனிலை தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஏப்.1.,2023 நிலவரப்படி, விண்ணப்பதாரர் 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., ஓ.பி.சி, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாத சம்பளம்:

ரூ.41,960 முதல் ரூ.63,840 வரை.

தேர்ந்தெடுக்கும் முறை:

முதனிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு/ பிற்படுத்தப்பட்டோர் எனில் ரூ.750 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி., விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் எதுவுமில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், கட்டணத்தை செலுத்தவும் செப்.,27ம் தேதி கடைசி நாளாகும்.

கூடுதல் விவரங்களுக்கு, எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரபூர்வ இணையதளமான www.sbi.co.in தளத்தை பார்வையிடலாம்.

Related Posts

error: Content is protected !!