டி20 உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..!

டி20 உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..!

மெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடந்தது. பைனலில் (பார்படாஸ்) 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி உலக கோப்பை வென்றது.

இந்த மகிழ்ச்சியுடன் நாடு திரும்ப இருந்த இந்திய வீரர்கள் பார்படாசில் ஏற்பட்ட சூறாவளி, புயல், கனமழை என சுழற்றி அடித்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. அதனால் 3 நாள் ஓட்டலில் முடங்கினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்திய வீரர்களை அழைத்துவர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

வானிலை சரியான நிலையில், நேற்று காலை 11:30 மணிக்கு (இந்திய நேரப்படி) விமானம் பார்படாஸ் சென்றது. அங்கிருந்து, மதியம் 2:20 மணிக்கு, இந்திய வீரர்கள் அவர்களது குடும்பத்தினர் பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா தலைவர் ரோஜர் பின்னி, பயிற்சியாளர்கள் இந்திய பத்திரிகையாளர்கள் ஆகியோர் தனி விமானத்தில் கிளம்பினர்.

1https://x.com/BCCI/status/1808693845208498491

16 மணி நேர பயணத்துக்குப் பின், இன்று காலை, டில்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். வெற்றிக் கோப்பையுடன் வந்த வீரர்களுக்கு, விமானநிலையத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், வாழ்த்து மழை பொழிந்தனர். இன்று பிரதமர் மோடியை, டி-20 உலக கோப்பையுடன் இந்திய வீரர்கள் சந்திக்க உள்ளனர். மதியம் இந்திய வீரர்கள் மும்பை செல்கின்றனர்.

error: Content is protected !!