ஐ. க்யூ போட்டியில் ஐன்ஸ்டீன், ஹாக்கிங்கை விஞ்சிய இந்திய வம்சாவளிச் சிறுமி!

ஐ. க்யூ போட்டியில் ஐன்ஸ்டீன், ஹாக்கிங்கை விஞ்சிய இந்திய வம்சாவளிச் சிறுமி!

ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அவனி/ளின் 12வது வயதிற்குள் 85சதவீதம் முடிவடைகிறது. அந்த அறிவு 17வயது வரை அதிகரிக்கிறது. ஆகவே பெரும்பாலான நாடுகளில் ஒரு பையன் 18வயதில் வயதுக்கு வந்து விட்டவனாக அல்லது முதிர்ச்சி அடைந்தவனாகக் கருதப்படுகிறான்/ள். ஒருவரின் ஐ.க்யூ என்பது அவனது மன வயது *100/6 என்பதாகும். ஐ.க்யூ என்பதை புள்ளிவிவரங்களின் பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்த வயதில் இந்த அளவு இருக்க வேண்டும் என்ற ப்படையில் கணக்கிடப்படுகிறது. ஐ.க்யூ 130உள்ளவர்கள் மேதைகள் என்றும் ஐ.க்யூ 70க்கும் குறைவாக ஆக ஆக மக்கு என்பதில் ஆரம்பித்து ஐ.க்யூ29 என்பதில் முடியும் போது மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் இரண்டு வயதுக்கும் கீழாக உள்ள குழந்தையின் மனநிலையில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகின்றனர். மனப் பயிற்சிகளையும் உடல் பயிற்சிகளையும் செய்வதன் மூலம் மூளை ஆற்றலைக் கூட்டி ஐ.க்யூ வை அதிகரிக்க முடியும். புதிர், புதிர்கணக்கு ஆகியவற்றை விடுவிப்பது கற்பனை வளத்தை பெருக்குவது போன்ற பயிற்சிகள் ஐ.க்யூ வை அதிகரிக்கும்.யூசிமாஸ் என்ற அமைப்பு கணித அறிவாற்றலை பெருக்க இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பல நகரங்களிலும் செயல்படுகிறது.

iq may 8

அதே சமயம் நம் இந்திய குழந்தைகள் அவ்வப்போது ஐ க்யூ வில் சர்வ்தேச அளவிலான ரேங்க மிஞ்சுவது வாடிக்கைதான். அந்த வகையில் உலகளாவிய நுண்ணறிவுத் திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி ராஜ்கவுரி பவார் (12) புதிய சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள கேதோர்பி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மென்ஸா அமைப்பில் உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். மென்ஸா அமைப்பு சார்பில் நுண்ணறிவு திறன் போட்டி நடத்தப்படுகிறது. இதில் மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்று குறைந்தது 98 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மென்ஸா அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவர்.

உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஜன்ஸ்டின், ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் மென்ஸா நுண்ணறிவுத் திறன் போட்டியில் 160 மதிப்பெண்கள் பெற்றனர். இந்நிலையில் கடந்த மாதம் நடந்த மென்ஸா தேர்வில் பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி ராஜ்கவுரி பவார் 162 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். ஜன்ஸ்டினைவிட அவர் கூடுதலாக 2 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

Related Posts