சாம்பியன் கோப்பைக்கான இந்திய அணி பட்டியல் ரிலீஸ்1
சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் சர்வதேச அணிகள் கலந்துகொள்கின்றன.

இதில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிவரும் ரிஷப் பந்த், ஷிகர் தவண், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பந்த் மட்டும் பட்டியலில் இல்லை.
15 பேர் பட்டியல் இதோ:
விராட் கோலி
ரஹானே
ரோகித் ஷர்மா
தோனி
யுவராஜ் சிங்
ஷிகர் தவண்
கேதர் ஜாதவ்
உமேஷ் யாதவ்
பும்ரா
புவனேஸ்வர் குமார்
மனிஷ் பாண்டே
ஜடேஜா
அஸ்வின்
ஹர்திக் பாண்டியா
முகமது ஷமி


