கிளாஸ் டீச்சரை லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கிட்ட மக்ரோன் – பிரான்ஸ் அதிபரானார்!
பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவில் என் மார்சே என்ற அணியின் சார்பில் போட்டியிட்ட மக்ரோனுக்கு 65.5% சதவித ஓட்டுகள் இவருக்கு அடுத்தபடியாக மெரைன் லி பென்னுக்கு 34.5% வாக்குகள் கிடைத்தன. வெற்றி குறித்து மக்ரோன் கூறும்போது, “பிரான்ஸின் நீண்ட வரலாற்றில் புதிய அத்தியாத்தின் தொடக்கமே இந்தத் தேர்தல் வெற்றி. இது புது நம்பிக்கையை விதைக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.

இப்போ இந்த புது அதிபரின் அந்தரங்க வாழ்க்கைப் பற்றி கொஞ்சூண்டு தெரிஞ்சே ஆகணும் : இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தன்னுடைய 15-வது வயதில் (1993-ல்) ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது வகுப்பு டீச்சாரான டிராக்னக்ஸ் மீது மக்ரோன் காதல் வயப்பட்டுள்ளார். அப்போது டிராக்னஸுக்கு 42 வயது. அவரது 15 வயது மகளும், மக்ரோனுடன் அதே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இதனால் டிராக்னஸின் மகளைத் தான் அவர் காதலிக்கிறார் என அனைவரும் புரிந்து கொண்டிருந்தனர்.
ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பின் டிராக்னஸை வேறொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த மக்ரோன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது 3 குழந்தைகளுக்கு தாயாக இருந்த அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் மக்ரோனுடன் நெருங்கி பழகி. அப்பாலே 2007-ல் இருவரும் திருணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது 64 வயதான டிராக்னஸுக்கு 7 பேரக் குழந்தைகள் இருக்கின்றனர் என்பது அடிசினல் தகவல்.
தற்போதைய வெற்றி மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமை 39 வயதான எம்மானுவேல் மக்ரோனுக்கு கிடைத்துள்ளது.
மேலும் எம்மானுவேல் மக்ரோன் அதிபர் தேர்தலில் அடைந்த வெற்றிக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம்,
இந்தியா
இந்திய பிரதமர் மோடி: “பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ரோனுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தியா – பிரான்ஸ் உறவை வலிமையாக்க மக்ரோனுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்”
அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: “பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள எம்மானுவேல் மக்ரோனுக்கு வாழ்த்துகள். மக்ரோனுடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக உள்ளேன்”
ஜெர்மனி
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல்லின் செய்தித் தொடர்பாளர்: “வாழ்த்துகள் மக்ரோன், உங்களது இந்த வெற்றி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் – ஜெர்மனி இடையேயான உறவை பலப்படுத்தும்”
சீனா
சீன அதிபர் ஜீ ஜின்பிங்: “பிரான்ஸில் முக்கிய அரசியல் தலைவராக உருவாகியுள்ள எம்மானுவேல் மக்ரோனின் வெற்றிக்கு வாழ்த்துகள். உலக அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கு பிரான்ஸுடன் இணைந்து சீனா பணியாற்ற தயாராக உள்ளது”
இங்கிலாந்து
இங்கிலாந்து அரசு செய்தித் தொடர்பாளர்: “பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்மனுவேல் மெக்ரோனுக்கு இங்கிலாந்து பிரதமர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் இங்கிலாந்தின் நெருக்கமான நட்பு நாடு. பிரான்ஸின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளோம்”
கனடா
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ: “மக்ரோனுடன் முற்போக்கான செயல்பாட்டு திட்டத்தின் மூலம் சர்வதேசப் பாதுகாப்பை ஊக்குவிக்க விருப்பமாக இருக்கிறேன்”


