பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்திய சாதனையாளர் அபிஜித் பானர்ஜி – முழுத் தகவல்!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்திய சாதனையாளர் அபிஜித் பானர்ஜி – முழுத் தகவல்!

2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி ஆவார். மற்ற இருவர்கள் எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரம்மர் ஆவார்கள். “உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகு முறைக்காக” இவர்களுக்கு நோபல்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அபிஜித் பானர்ஜி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அவரது தாய் நிர்மலா பானர்ஜி கொல்கத்தா சமூக அறிவியியல் கல்வி மையத்தில் பொருளாதார பேராசிரியை. தந்தை தீபக் பானர்ஜி கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் பொருளாதார பேராசிரியர். கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் பொருளாதார இளங்கலைப்பட்டம் பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றார். பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அபிஜித் பானர்ஜி அருந்ததி துலி பானர்ஜியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுது மகன் கபிர் பானர்ஜி. பின்னர் அபிஜித்தும், அருந்ததியும் விவகாரத்து பெற்றனர். அதன் பிறகு தன்னுடன் சேர்ந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட எஸ்தர் டூப்ளோவுடன் இணைந்து வாழ்ந்தார். அவர்களுக்கு 2012ம் ஆண்டு குழந்தையும் பிறந்தது. பின்னர் இருவரும் 2015-ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

58 வயதாகும் மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான அபிஜித் முகர்ஜி, போர்டு பவுண்டேஷன் சார்பில் செயல்படும் மசசூட்ஸ் இண்டியூட் ஆப் டெக்னாலஜியில் பொருளாதார பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 2003-ம் ஆண்டு அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகத்தை தனது மனைவி எஸ்தர் மற்றும் தமிழரான செந்தில் முல்லைநாதனுடன் சேர்ந்து தொடங்கினார். 17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ‘ஏழை பொருளாதாரம்’ உள்ளிட்ட மிக முக்கிய பொருளாதார புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். வறுமை ஒழிப்பு குறித்த இவரது பார்வை உலக அளவில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. கடந்த 20 ஆண்டுகளாக வளர்ச்சி பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்ச்சிகளுக்கு புதிய கோணத்தை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் 70 கோடி மக்கள் மிகவும் மோசமான வருமானத்தை கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 50 லட்சம் குழந்தைகள் குறைந்தபட்ச மருத்துவ உதவி கூட கிடைக்காமல் மரணமடைகின்றனர். இதுபற்றிய அவரது ஆய்வுகள் புதிய வளர்ச்சி பொருளாதாரத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.

‘‘மொராகோ நாட்டில் ஒருவேளைக்கு கூட போதுமான உணவு கிடைக்காத நபர் தொலைக்காட்சி வாங்க முடியுமா? ஏழையாக இருக்கும் குழந்தைகள் பள்ளிக்கு சென்றாலும் கூட ஏன் கற்க முடியாமல் போகின்றனர். குழந்தைகள் திட்டமிட்டேஏழைகளாக்கப் படுகின்றனரா? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மட்டுமே உலகளாவிய வறுமையை நாம் விரட்ட முடியும்’’ என அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!