ஜப்பானில் புயல் தாக்குதல்: 35 பேர் பலி- 100 பேர் காயம்!

ஜப்பானில் புயல் தாக்குதல்: 35 பேர் பலி- 100 பேர் காயம்!

ஜப்பானில் நேற்றைய (சனிக்) கிழமை இரவு 7 மணியளவில் டோக்யோவின் தென்மேற்குப் பகுதி யில் ஹகிபிஸ் புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 144 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியடன் கனமழை கொட்டியது. அதனால் வீடுகளின் மேற்கூரைகள், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின. அதே சமயம் இந்த ஹகிபிஸ் புயல் தாக்குதலுக்கு 35 பேர் பலியாகி உள்ளனர். 100 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கிறது.

நேற்றிரவு நில அதிர்வு ஒரு பக்கமும் ஹகிபிஸ் புயல் நேற்று ஜப்பானை கடுமையாகத் தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7:00 மணிக்கு புயல் கரையை கடந்தது. இதனால், பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக ஹகிபிஸ் கருதப்படுகிறது. இந்த ஹகிபிஸ் புயல் மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் தாக்கியது.

கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்ததால், வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. பல வீடுகள் கன மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.டோக்கியோ, மிய், ஷிசுவோகா, சிபா உள்பட பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 42 லட்சம் பேர் ஏற்கனவே பாது காப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். டோக்கியோவில் ஓட்டல்கள், கடைகள், மருந்தகங்கள் மூடப்பட்டன. முன்னெச்சரிக்கையாக, ஜப்பான் முழுவதும் சுமார் 2,000 சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2 லட்சத்து 50,000 வீடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு தேவையான மின் சேவை துண்டிக்கப்பட்டது. பல வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. புயல் தாக்குதலுக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் பலரை காணவில்லை என மீட்பு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.

கிழக்கு மற்றும் மத்திய ஜப்பான் பகுதியில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அரசால் வெளியிடப் பட்டது.ஹகிபிஸ் புயால் பாதிப்பு காரணமாக ரக்பி உலக கோப்பை போட்டியில் 3 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹொன்சு தீவில் இருந்து 60 லட்சம் பேர் வெளியேற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையம் மற்றும் ஷிங்கான்சென் புல்லட் ரயில் சேவைகள் இன்று காலையில் இருந்து மீண்டும் தொடங்கப்பட்டன.

இதனிடையே ஹகிபிஸ் புயல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பேரிடரை சமாளிக்க ஜப்பான் அரசு எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அங்கு இருக்கும் இந்திய கடற்படையினர், மீட்பு பணியில் உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!