தமிழ் குரல் / AI Voice
இப்போதெல்லாம் காதல் என்று பெயர் வைத்துக்கொண்டு காமத்தோடு சுற்றுபவர்கள் தான் அதிகம். பிரேக்-அப் என்ற வார்த்தைக்கு பிறகு இப்போதெல்லாம் காதல் கைக்கூடுவதே இல்லை. மொத்தத்தையும் முடித்துக் கொண்டு, மொத்தத்தையும் மறந்துவிடுகின்றனர். காதலை சின்ன சின்ன சண்டைகள் தான் வளர்க்கும் என கவிஞர்.நா.முத்துகுமார் அவர்கள் எழுதினார். மேலும் காதல் கடிதம் அனுப்பிய காலமெல்லாம் போய் இப்பொழுது போன் செக்ஸ் வந்துவிட்டது, தொலைதூரத்தில் வசிக்கும் ஜோடிகள் ‘ரொமான்டிக்’காக உரையாட விரும்புகிற வழி இதுவே” என பிரபல அமெரிக்க பத்திரிகைகள் பீற்றி கொண்ட நிலையில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இணையதள பயன்பாட்டில், தாங்கள் மேற்கொள்ளும் உடலுறவுகள், பாலியல் பேச்சுகள், ஸ்ட்ரிப் ஷோ எனப்படும் ஆடைகளை ஒவ்வொன்றாக களைவது உள்ளிட்ட பல்வேறு பாலியல் ரீதியான விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணம் சம்பாதிக்கும் முறை பெருகி வருகிறது என்பதுதான் தர்போதைய சோகச் செய்தி.



