சர்வதேச அளவில் அதிக சாலை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடம்

சர்வதேச அளவில் அதிக சாலை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடம்

ந்த பரந்த, துண்டாடப்பட்டிருக்கும் உலகில் சாலை இணைப்பு வசதிகள் எவ்வளவு பரவலாக இருக்கும் என கேட்பது, நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இருகும். போக்குவரத்துக்கு மட்டுமின்றி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார நடவடிக்கைகளுக்கும் சாலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் சாலைகளின் அடர்த்தி மற்றும் நீளம் வேறுபட்டது. இது நாட்டின் அளவு, புவியியல் இருப்பிடம், மக்கள் தொகை, பொருளாதார வளர்ச்சி, தேவை மற்றும் அரசின் கொள்கைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.

அமெரிக்கா முதலிடம்

உலகிலேயே மிகப்பெரிய சாலை இணைப்பு வசதி கொண்ட நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அந்நாட்டில் 75 லட்சம் கிலோ மீட்டருக்கு அதிகமான சாலைகள் உள்ளன. பெரும்பாலும் அந்நாட்டின் கிராமப்புறங்களில் இருவழிச் சாலைகள் உள்ளன. அதன் பரந்த நிலப்பரப்பும் வளர்ந்த போக்குவரத்து வலையமைப்பும் இதற்குச் சான்று.

உலகிலேயே இரண்டாவது பெரிய சாலை இணைப்பு வசதி கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் 66.7 லட்சம் கிலோமீட்டர் சாலை வசதிகள் உள்ளது. இதில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும். 1,79,535 கி.மீ. தூரத்திற்கான சாலை மாநில நெடுஞ்சாலைகள் ஆகவும், 63,45,403 கி.மீ. தூரத்திற்கான சாலைகள் பிற சாலைகளாகவும் உள்ளன.

நாட்டின் மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் மாறுபட்ட புவியியல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது ஒரு பெரிய சாதனையாகும். 5 டிரில்லியன் மதிப்பிலான பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட, சாலை வசதி போன்ற உட்கட்டமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சாலை வசதியில் 3 வது இடத்தில் உள்ள சீனா, சர்வதேச பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் அதன் சாலை வலையமைப்பும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அதன்படி, சீனாவில் 51.9 லட்சம் கிலோமீட்டர் சாலை நெட்வொர்க் உள்ளது.4 வது இடத்தில் உள்ள பிரேசிலின் நிலப்பரப்பு மிகப் பெரியது மற்றும் அது மிகப்பெரிய சாலை வலையமைப்பைக் கொண்டுள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின்படி, பிரேசிலில் சாலை நெட்வொர்க் 20 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு மேல் பரவியுள்ளது. ஜப்பானில் 15 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் சாலைகள் பரவி 5 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CLOSE
CLOSE
error: Content is protected !!