ஹிட்லர் விமர்சனம்!

ஹிட்லர் விமர்சனம்!

சை என்றால் என்னவென்றே தெரியாமல் சவுண்ட் இன்ஜினியர் என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக் கொண்டு மியூசிக் டைரக்டர் என்ற டைட்டில் ,நடிப்பு என்பது நவரசகலை என்பதை உணராமல் வெட்கத்தை கை விட்டவரே ஆக்டர் என்று தானே நம்பி நடிகராக உலா வருபவர், இயக்குநர் என்பதன் பாரத்தை உணராமலே டைரக்டர் டைட்டிலை போடும் வித்தை தெரிந்தவர்.. இன்னும்.. இன்னும் கோலிவுட்டின் மோடி என்று பெயரெடுத்த விஜய் ஆ ண்டனி என்ற நெல்லை ஜீவன் தயவில் ரிலீஸாகி இருக்கும் படமே ஹிட்லர். இப்பட புரோமோசனுக்காக காளான்களை எல்லாம் மேடை ஏற்றி ஊடகவாசிகளின் தரத்தை குறைத்த விஜய் ஆண்டனி கொடுங்கோ லன் பெயரில் ஒரு லவ் (அர்த்தம் தெரியுமா விஜய் ஆண்டணி என்ற நாம கரணம் கொண்ட பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜாவே ! அதிலும், ஜெண்டில் மேன் & சிட்டிசன் பாதிப்பில் உருவான கதையில் கூட அக்கறைக் காட்டாமல் ரசிகனின் 2மணி நேரத்தை விரயம் செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள் பிரான்சிஸ்?

விஜய் ஆண்டனி வேறு படமொன்றில் நடித்தபோது விபத்தில் சிக்கி மீண்ட பிறகு நடித்த படமாம் இந்த ஹிட்லர். அதாவது சென்னைக்கு நண்பனுடைய ரூமில் தங்கிக் கொண்டு வேலை தேடும் இளைஞராக வரும் விஜய் ஆண்டனி ரயிலில் சந்திக்கும் ரியா சுமனை துரத்தி துரத்தி லவ்வுகிறார். இவரது காதல் டைரக்டர் கட்டளைப்படி அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இச்சூழலில் அமைச்சராக இருக்கும் சரண் ராஜ் வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று அடுத்த சி.எம். ஆகி விட வேண்டும் என்ற நோக்கில் தொகுதிக்கு ஒவ்வொரு வழியில் வேறு வேறு விதத்தில் பணம் அனுப்புகிறார். ஆனால் அந்த பணமும் தொடர்ந்து ஒரே ஒரு நபரால் ஒவ்வொரு பாயிண்டில் விதம் விதமாக கொள்ளையடிக்கப்படுகிறது. இதனை அண்டர் வேர் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக (அன் அபீஷியியலாக) கௌதம் மேனன் நியமினம் செய்ய படுகிறார்.அவரும் படாத பாடுபட்டு கொள்ளையர்கள் யார் அவர்கள் எங்கிருந்து வந்தனர் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி டைரக்டர் தயவில் அந்த பணத்தை கொள்ளை அடித்தது விஜய் ஆண்டனி தான் என கண்டுணர்ந்து விடுகிறார் . பிறகென்ன விஜய் ஆண்டனி ஏன் அந்த பணத்தை கொள்ளை அடித்தார்? அதற்கான பின்னணி என்ன? என்பதே ஹிட்லர் கதை.

முன்னரே சொன்னது நடிப்பென்றாலே என்னவென தெரியாத விஜய் ஆண்டனி ஹிட்லர் டைட்டிலுடன் மெளன ராகம் கார்த்தி , அலைபாயுதே மாதவன் ஸ்டைலில் லவ்வுவதெல்லம் சகிக்கவில்லை.. குறிப்பாக படம் தொடங்கியவுடன் இதுதான் க்ளைமேக்ஸ் என்று ஊகித்து விட முடிகிறது. அதிலும் ஒவ்வொரு கொலை நடக்கும்போதும் அதை விஜய் ஆண்டனிதான் செய்கிறார் என்பதை நாம் அறியாமல் இருக்க லவ் சீன்களை பயன்படுத்தி கடுப்பேற்றி இருக்கிறார்.மேலும் ஆக்‌ஷன் காட்சியெல்லாம் நம்பக தன்மையே இல்லை. ரியா சுமன் திரையில் அழகாக தெரிகிறார். கதையில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது, அதனை புரிந்து கொண்டு நன்றாகவே நடித்துள்ளார்.

இவர்களை தாண்டி படம் முழுக்க ஸ்கோர் செய்வது கௌதம் வாசுதேவ் மேனன் தான். போலீஸ் அதிகாரியாக வழக்கம் போல தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு வலு சேர்கிறது. இவர்களை தாண்டி வில்லனாக வரும் சரண்ராஜ், விவேக் பிரசன்னா, இயக்குனர் தமிழ் ,ஆடுகளம் நரேன் ஆகியோரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை பின்னணியையும் ஏதோ டென்ஷனில் ஒப்பேற்றி இருக்கிறார் .

ஜென்டில்மேன், சிட்டிசன் போன்ற படங்களில் இருந்து சினிமா பல சீன்களைக் புது நூலில் கோர்த்து ஆக்‌ஷன் & லவ் மூவி என்ற எண்ணத்தை உருவாக்கி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் வானம் கொட்டட்டும் இயக்குநர் தனா. ஆனால் எடுபடவில்லை.

மார்க்1.5/5

error: Content is protected !!