ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்பி ஹிந்துஜா காலமானார்.- யாரிவர் தெரியுமோ?

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்பி ஹிந்துஜா காலமானார்.- யாரிவர் தெரியுமோ?

ஹிந்துஜா குரூப் என்பது பிரிட்டனின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தில் ஒன்று . இக் குழுமம் நிதி சேவைகள், ஐடி, கச்சா எண்ணெய், மீடியா, டெலிகாம், மருத்துவம், கேஸ், ஆட்டோமொபைல் போன்ற பல்வேறு துறைகளில் தங்களது வியாபாரத்தைச் செய்து வருகிறார்கள். அசோக் லேலண்ட், ஹிந்துஜா ஹெல்த் கேர், ஹிந்துஜா பேங்க் (சுவிட்சர்லாந்து), indusind வங்கி, ஹிந்துஜா லேலாண்ட் பைனான்ஸ், ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன், Indusind மீடியா அண்ட் கம்யூனிகேஷன், ஹிந்துஜா ரியாலிட்டி வென்ச்சர்ஸ் என இந்நிறுவனம் பல கம்பெனிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் இந்தக் குழுமம் கேபிபி ஹிந்துஜா காலேஜ் ஆப் காமர்ஸ் என்கிற கல்லூரியும் நடத்தி வருகின்றனர்.

இந்தியா, ஐரோப்பாவிலும் ஹிந்துஜா குரூப்பின் வர்த்தகம் சாம்ராஜ்ஜியம் பெரிய அளவில் உள்ளது. இதனை வழிநடத்தி வந்தவர் ஹிந்துஜா குழுமத்தின் நான்கு சகோதரர்களில் மூத்தவரான ஸ்ரீசந்த் பிரேமானந்த் ஹிந்துஜா அலைஸ் எஸ்பி ஹிந்துஜா. இவர், சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில் இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 87.

1935ல் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவுக்கு கீழ் இருந்த சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் பிறந்தவர் எஸ்பி ஹிந்துஜா. மும்பை கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார். ஹிந்துஜா குழுமத்துக்கு அச்சாரமிட்டவர் எஸ்பி ஹிந்துஜாவின் தந்தையே எனலாம். அந்தக் காலத்திலேயே, அவரின் தந்தை பம்பாய் மற்றும் ஈரானில் வர்த்தகம் செய்தவர். இந்தியாவில் இருந்து ஈரானுக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருள்கள் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றை வர்த்தகம் செய்துவந்தார். தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றி, தந்தையின் ஜவுளி மற்றும் வர்த்தகத் தொழில்களை கவனித்து கொள்வதன் மூலம் எஸ்பி ஹிந்துஜா தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். சினிமா விநியோக தொழிலையும் இவர் மேற்கொண்டுள்ளார் .

எஸ்பி ஹிந்துஜாவின் மகன்கள் தற்போது ஹிந்துஜா குழுமத்தை நிர்வகித்து வருகின்றனர். இந்த ஒட்டு மொத்த ஹிந்துஜா குழுமத்தின் தலைவராக எஸ்பி ஹிந்துஜா இருந்து வந்தார். அதே சமயம் ஹிந்துஜா பவுண்டேஷன் இன் தலைவராகவும் பதவி வகித்தார். ஹிந்துஜா குழுமத்தை மிகப்பெரிய வெற்றிக்கு இவர் தான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!