செய்தியைக் கேட்க / Listen to News
பள்ளி / கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு ..2024 ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் நாளை மே மாதம் 6 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம். இந்த 2024-25 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள், கீழ்கண்ட விஷயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

பெற்றோர்களுக்கான அறிவுரை,
1. மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து கொள்வது நல்லது.
2. மாணவர்களின் மாற்று சான்றிதழ் (TC), மதிப்பெண் சான்றிதழ் (10th, 11th and 12th Mark sheets) மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF/JPEG வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பிகள் (ஜெராக்ஸ்) தேவை.
3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப் பிரிவில் சேர்ப்பது என பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.
4. மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப் பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும்.
5. கல்லூரி சேர்க்கை தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.
6. தற்பொழுது பெரும்பாலான கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
7. பெரும்பாலான தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.
நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியான சில தினங்களில் பொறியியல் கலந்தாய்வு, பொது மருத்துவ கலந்தாய்வு மற்றும் வேளாண் படிப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படலாம்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்

