ஜோதிகா நடிக்கும் படத்தின் பெயரை சொன்னால் ஒரு நாள் விஐபி ஆகலாம்!

ஜோதிகா நடிக்கும் படத்தின் பெயரை சொன்னால் ஒரு நாள் விஐபி ஆகலாம்!
பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த ‘நாச்சியார்’ படம் சமீபத்தில் வெளியாகி  வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் ஜோதிகாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.  ‘இதையடுத்து  ஜோதிகா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘துமாரி சுலு’. இதன் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளார்.  அவருக்கு ஜோடியாக விதார்த் நடிக்கிறார். மொழி, அபியும் நானும் போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் ராதாமோகன் இப் படத்தை இயக்கவுள்ளார். . இப்படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார். வித்யாபாலன் நடித்த ஆர்.ஜே கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். நேஹா தூபியா நடித்தகேரக்டரில் லக்ஷ்மி மஞ்சு நடிக்கிறார்.நடிகர் விதார்த் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார். ராதாமோகன் இயக்கும் படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிரோட்டமுள்ளதாக இருக்கும் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜோதிகாவின் படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில்,  ”ஜூன் 2018 முதல் சென்னையில் எங்கள் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடியப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். ஜோதிகா – விதார்த் இன்னும் பலர் நடிக்கின்றனர். நீங்கள் அனைவரும் படப்பிடிப்புத் தளத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்.. படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகித்துச் சொல்ல வேண்டும்.

 
அதற்கான் க்ளூ பின்வருமாறு:
 
1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.
 
2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.
 
3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.
 
 
இப்போது விளையாட்டைத் தொடங்குங்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
 
சரியான பதில்களை யூகித்துச் சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் இருக்கலாம். மேலும், நடிகர், நடிகை மற்றும் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
 
இப்போதே உங்கள் சிந்தனையைத் தட்டி விடுங்கள் உங்கள் படைப்பாற்றலைக் காட்டுங்கள்.
 
போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார்.
 

Related Posts