இந்திய கடற்படையில் இணைந்த பிரமாண்ட மோர்முகோவ் போர்க்கப்பல்!- வீடியோ

இந்திய கடற்படையில் இணைந்த பிரமாண்ட மோர்முகோவ் போர்க்கப்பல்!- வீடியோ

ந்திய கடல் எல்லைப் பகுதிகளில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது .இச்சூழலில், ஐஎன்எஸ் மோர்முகோவ் போர்க்கப்பல், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கப்பலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 75 சதவிகிதப் பொருள்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பதுதான் கூடுதல் சிறப்பு.

இந்திய கடற்படையின் ப்ராஜெக்ட்-15 எனும் திட்டத்தின் கீழ் முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது போர்க்கப்பல் மோர்முகோவ். கோவாவில் உள்ள பழமையான துறைமுக நகரமான மோர்முகோவின் பெயர் தான் புதிய போர்க்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதே ப்ராஜெக்ட்-15 எனும் திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு போர்க்கப்பல்கள் 2025க்குள் இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்டுள்ளன

மோர்முகோவ் அதிநவீன போர் கப்பல், 163 மீட்டர் நீளமும் 17 மீட்டர் அகலமும் கொண்டது. 7 ஆயிரத்து 400 டன் எடை கொண்ட மோர்கோவா கப்பல், இந்தியாவில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாகும். மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக மோர்முகா போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. , இந்திய கடற்படையின் உள் நிறுவனமான ‘வார்ஷிப் டிசைன் பீரோ’வால் வடிவமைக்கப்பட்டு ‘மாஷாகான் டாக்’ என்னும் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டதிது

இதன் முக்கிய சிறப்பம்சமாக, அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரேடார் கருவிகள் மூலம், தரை மற்றும் வானில் உள்ள இலக்குகளை எளிதில் தாக்கும் வகையில் பிரமோஸ் ஏவுகணை தளவாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், நீர்மூழ்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களும் மோர்முகாவ் போர் கப்பலுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, அணு ஆயுதங்கள் மற்றும் உயிரியல் போர்முறையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய கப்பற்படைகளில் உள்ள எதிரிகளை தாக்கி அழிக்கும் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாக மோர்முகாவ் கருதப்படுகிறது

மும்பையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மோர்முகாவ் அதிநவீன கப்பலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டிற்கு அர்ப்பணித்த நிலையில் இக்கப்பல் கடற்படையுடன் இணைக்கப்பட்டு தனது பணியை தொடங்கி விட்டது.

error: Content is protected !!