சவுதி தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளர்!

சவுதி தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளர்!

சவுதி அரேபியாவில்  தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களாக பென்களும் பணியாற்ற அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

முஸ்லீம்  ஆட்சி நடக்கும் சவுதி அரேபியாவில் பெண்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன. இதனிடையே,  மன்னர் சல்மானின் இளைய மகனான முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்துவருகிறார். அதன் படி பெண்கள் கார் ஓட்ட அனுமதி கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பெண்களுக்கு அனுமதி (.  சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன) விளையாட்டுப் போட்டிகளைப் பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி என்று அதிரடி புரட்சி நடந்து வருகிறது

அந்நாட்டு பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இளவரசர் சல்மானின் இந்த நடவடிக்கைகள், சவுதி அரேபியப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில், தற்போது அந்நாட்டுப் பெண்கள் மற்றுமொரு மைல் கல்லையும் எட்டியுள்ளனர். சவுதி அரேபியாவில் பெண்கள் செய்தி வாசிக்க முதல்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, `சவுதியா’ என்ற தேசிய தொலைக்காட்சியில், வீம் அல் தஹீல் (Weam Al-Dakheel) என்ற பெண் செய்தி வாசித்து, அந்நாட்டில் முதல்முறையாக செய்தி வாசித்த பெண் என்ற பெருமை யைப் பெற்றுள்ளார். அல் தஹில் சி.என்.பி.சி அரேபியா என்ற பத்திரிக்கையில், பயிற்சியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் முக்கியச் செய்திகளை ஆண் வாசிப்பாளருடன் இணைந்து வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. இவரின் சாதனையை சவுதியா தன் ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடிவருகிறது.

அரசின் இந்த முடிவிற்குப் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் விஷன் 2030 என்ற பெயரில் இளவரசர் மேலும் பல புரட்சிக்கரமான திட்டங்களுக்கு அனுமதியளிப்பார் என்றும் சவுதி பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Posts