32°C
விளம்பரம்
Advertisement

“விஷால்.. இது டூ மச்”! – ஃபெப்சி செல்வமணி ஆவேசம்!

admin சேலம் Published: July 26, 2017 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியைச் சேர்ந்த சில அமைப்பு கள் தங்கள் தொழிலா ளர்களுக்கான சம்பளத்தை தாங்களே நிர்ணயித்து, தயாரிப்பாளர்களை நிர்ப்பந்தப்படுத்தி வந்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்த் திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) இடையே தொழிலாளர் கள் சம்பளம் தொடர்பான பேச்சு வார்த்தை நேற்று நடந்தது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பெப்சியை சேர்ந்த சில அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட்டு தயாரிப்பாளர் களுக்கு படப்பிடிப்புகளில் பொருளாதார இழப்பையும், பேச்சுவார்த்தை என்ற பெயரில் மன உளைச்சலையும் கொடுத்து வருகின்றனர். இதை பெப்சி கண்டுகொள்ளா மலும், தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளரை இழிவுபடுத் துவதை கண்டிக்காமலும் இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புகள் அராஜகமாக தங் கள் சம்பளத்தை நிர்ணயித்து தயாரிப்பாளர்களை நிர்ப்பந்தப் படுத்துகின்றனர்.

எனவே இனிமேலும் தயாரிப் பாளர்களை சங்கம் கைவிட முடியாது. சம்மேளனமோ, தொழி லாளர்களோ தயாரிப்பா ளர்களின் எதிரிகள் அல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவது தயாரிப்பாளர்களின் கடமை. அதே வேளையில் அநியாயமான முறையில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவதையும் ஏற்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயிக்கும் சம்பள பட்டியல்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும். மேலும் இன்று (25-ம் தேதி) முதல் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு உடன்படும் யாருடனும் தேவையான அளவில் ஆட்களை வைத்து வேலை செய்யும்படி தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது” என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

இதையடுத்து பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வ மணி தலைமையில் காலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் விசாலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  கூட்டம் முடிந்த பின் செய்தியஆளர்களிடம் பேசிய செல்வமணி, “”விஷாலின் இந்த முடிவை ஏற்க முடியாது. இந்த தன்னிச்சையான முடிவைக் கண்டிக்கிறோம். ஃபெப்சியில் இல்லாதவர்களை கண்டிப்பாக படப்பிடிப்புக்குப் பயன்படுத்தக் கூடாது. ஃபெப்சி – தயாரிப்பாளர் பிரச்சினை இன்று நேற்றல்ல.. 40 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. படத் தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்துதான் ஃபெப்சி அமைப்பு செயல்படுகிறது. ஆனால் தொழிலாளர்களின் நிலையை தயாரிப்பாளர்கள் உணர்வதில்லை. 40 ஆண்டுகால பிரச்சனையை 4 மாதத்தில் தீர்த்து விட முடியாது என்பதை விஷால் உணர வேண்டும். இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாம்,” என்று தெரிவித்தார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்