வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள்!

வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள்!

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி  இன்று வரை டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இந்த நாட்டுக்கு தேவை இல்லாத வேளாண் சட்டங்கள் என்று பொருள்படும்படி, ஹோலிப் பண்டிகையில் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்துள்ளனர்.

இந்தியாவின் பல இடங்களில் கொரோனா பரவல் காரணமாக ஹோலி பண்டிகை சில கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று ‘ஹோலிகான் தஹான்’ என்ற பாரம்பரிய விழாவை கொண்டாடினர். இந்த விழாவின் வழக்கம், ஹோலி பண்டிகையின் போது தேவையில்லாதவற்றை தீயிட்டு எரிப்பது ஆகும். இந்த முறையானது, ஹோலிகா என்ற அரக்கியை எரிப்பதற்காக இப்படி செய்யப்படுகிறது.

டெல்லியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், நாட்டுக்கு தேவை இல்லாத இந்திய விவசாய சட்டம் என்று பொருள் படும்படி, வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்துள்ளனர் என்று சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!