இங்கிலாந்து : போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா!

இங்கிலாந்து : போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா!

ங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை கவனித்து வந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்தடுத்து பதவி விலகியதால் போரின்ஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால், விரைவில் அவர் தனது பதவியை துறப்பார் என்று கூறப்பட்டது. இந்த சூழலில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் முக்கிய துறையை கவனித்து வந்த எம்.பி. கிறிஸ் பின்ஷர் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதில் சரியான முடிவை போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவிகளை கடந்த செவ்வாய் கிழமை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நேற்று, மேலும் கல்வித் துறை அமைச்சர் வில் குயின்ஸ் மற்றும் செவெனோக்ஸ், லாரா ட்ராட் ஆகிய இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

ஏற்கனவே இரு எம்.பிக்கள் பதவி விலகியிருந்த நிலையில் மீண்டும் இரு எம்.பிக்கள் பதவி விலகியிருப்பது போரிஸ் ஜான்சன் கட்டாயமாக பதவி விலகும் நிலையை உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து போரிஸ் ஜான்சன் விரைவில் பதவி விலகுவார் எனவும் புதிய தலைவர் நியமனம் செய்யப்படும் வரை அவரே தற்காலிக பிரதமராக தொடர்வார் எனவும் அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது இங்கிலாந்து பிரதமர் பொறுப்பில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியுள்ளார்.

யாருக்கு அடுத்த பிரதமர் வாய்ப்பு?

போரிஸ் ஜான்சனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு அதிக போட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் , வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் , முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் இவர்களிடையே கடும் போட்டி நிலவலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜாவித் மற்றும் ஜஹாவி, தலைமை வழக்குரைஞர் சுயெல்லா பிராவர்மேன், 2019 தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜெரமி ஹன்ட் ஆகியோரும் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் பந்தயத்தில் உள்ளனர்.

error: Content is protected !!