இந்தியா – சிங்கப்பூர் -: அக்டோபர் 30 முதல் மீண்டும் முழு விமான சேவை அமல்!

இந்தியா – சிங்கப்பூர் -: அக்டோபர் 30 முதல் மீண்டும் முழு விமான சேவை அமல்!

ன்று வரை தொடர் கொலைகள் செய்து கொண்டிருக்கும் கொரோனா பரவலால் போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக இந்தியா – சிங்கப்பூர் இடையிலான விமான சேவை இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பயணிகள் விமான சேவை அதிகரித்துள்ளது. மேலும் வரும் அக்டோபர் 30 முதல் முழு அளவிலான விமான சேவை தொடங்கப்படும் என சிங்கப்பூர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவுக்கு அக்டோபர் 30–ம் தேதி முதல் மீண்டும் முழு அளவிலான பயணிகள் விமான சேவை மேற்கொள்ளப்படும். கொரோனாவுக்கு முன் இயங்கியது போல, முழு வீச்சில் பயணிகள் விமான சேவை மேற்கொள்ளப்படும். இதன்படி தற்போது சென்னைக்கு வாரத்தில், 10 முறை மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகள் விமான சேவை அக்டோபர் 30 ஆம் தேதி முதல் 17 ஆக அதிகரிக்கப்படும் என்றும் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை, 7-ல் இருந்து 14 ஆக உயர்த்தப்படும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!