இஸ்ரேல் நாட்டில் 10,000 கட்டுமான பணியாளர்களுக்கான மாதம் 1,37,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

இஸ்ரேல் நாட்டில் 10,000 கட்டுமான பணியாளர்களுக்கான மாதம் 1,37,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

ஸ்ரேல் நாட்டில் 10,000 பேருக்கு பணிவாய்ப்பு உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.நா.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இஸ்ரேல் நாட்டில் 10,000 கட்டுமான பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளது.

இந்தப் பணிக்கு 3 வருடம் பணி அனுபவம் உள்ள 25 முதல் 45 வயதிற்குட்பட்ட பூச்சு வேலை, செராமிக் டைலிங், கட்டிடம் மற்றும் இரும்பு சம்பந்தப்பட்ட வேலை ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

மாத ஊதியமாக சுமார் ரூ.1,37,000 பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை வரும் 29ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் ஆந்தை வேலைவாய்ப்பு/வழிகாட்டி & தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ் அப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இதன் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்டுகளோ இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!