சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்!
சட்டமன்றத்திற்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற குரல்களும், அதை விமர்சிக்கும் குரல்களும் எழுந்துள்ளன.1967 வரை தேர்தல்கள் அப்படித்தான் நடைபெற்றன. எமெர்ஜென்சியை அடுத்து மக்களவையின் ஆயுட்காலத்தை ஓராண்டு நீடித்து, 1976ல் நடை பெற்றிருக்க வேண்டிய தேர்தலை 1977ல் நடத்தியதையடுத்தும், அதற்குப் பின் வந்த அரசுகள் நிலையற்றுக் கவிழ்ந்தததால் மக்களவைத் தேர்தல்களை அடிக்கடி நடத்த நேர்ந்ததாலும் இந்தச் சமநிலை குலைந்தது.
1999லேயே சட்டக் கமிஷன் மக்களவைத் தேர்தல்களையும், மாநிலத் தேர்தல்களையும் ஒருங்கே நடத்தப் பரிந்துரைத்திருந்தது.
இரண்டு தேர்தல்களும் ஒன்றாக நடந்தால்-
தேர்தல் நடத்த ஆகும் செலவு (ரூ.4500 கோடி) குறையும்
தேர்தல் நடத்தை விதி முறைகளை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தி வளர்ச்சிப் பணிகள் இடையூறு இல்லாமல் தொடர்ந்து நான்காண்டுகளுக்கு தொய்வில்லாமல் நடத்த முடியும்
எல்லா நேரமும் தேர்தல் தேர்தல் என்று ஊடகங்களும் மக்களும் எப்போது பார்த்தாலும் அரசியல் சிந்தனையிலேயே பொழுதைப் போக்காமல் ஆக்க பூர்வமான வேலைகளில் ஈடுபடலாம். அரசியல் கடசிகளும் கூட தேர்தல் சிந்தனைகளிலிருந்து விடுபட்டு கருத்தியல்களில் கவனம் செலுத்தலாம்.
Why not?
மாலன் நாராயணன்