புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் ஆப்கான் போரில் பலி!

புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் ஆப்கான் போரில் பலி!

ப்கானிஸ்தானத்தில் நடக்கும் போர் தொடர்பாக களச் செய்தி அறிய அங்கு சென்றிருந்த புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த தனிஷ் சித்திக், 2018 ஆம் ஆண்டு ’புலிட்சர் விருது’ பெற்றவர். இவர், ‘ராய்ட்டர்ஸ்’ என்ற பத்திரிக்கை நிறுவனத்தில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார்.டெல்லி கலவரம், கொரோனா பொதுமுடக்கத்தின் போது புலம்பெயர்ந்தவர்கள், கொரோனா உயிரிழப்பு குறித்து, அவர் எடுத்த புகைப்படங்கள் சரவ்தேச அளவில் கவனத்தை ஈர்த்தன. அதனைதொடர்ந்து அவர், ஆப்கனில் நடந்து வரும் தலிபான்கள் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்க அங்கு சென்றார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கந்தகர் என்னும் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சென்று, தலிபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, தலிபான்களால் தாக்கப்பட்டு நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் டெல்லியில் தெரிவித்தார் மேலும் டேனிஷ் சித்திக்கு மறைவு குறித்து ட்வீட்டரில் செய்தி ஒன்றையும் ஆப்கானிஸ்தான் தூதர் பதிவு செய்துள்ளார். இவருக்கு, பல்வேறு தரப்பினரும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டேனிஷ் சித்திக்கு டெல்லியில் பொருளாதாரம் படித்தவர் அப்துல்கலாம் மாஸ் கம்யூனிகேஷன் ஆய்வு நிறுவனத்தில் செய்தி தொடர்பான சிறப்பு கல்வி பயின்றவர் மியான்மர் இராணுவத்திடம் இருந்து தப்பி வங்காளதேசத்துக்கு வந்த ரோஹிங்கியா முஸ்லிம்களின் குழு ஒன்றை சித்திக் படம் எடுத்தார். ரோஹிங்யா முஸ்லிம்கள் படகிலிருந்து இறங்கி பங்களாதேஷ் மண்ணை தொட்டதும் தரையை தடவி பார்ப்பதை படம் சித்தரிக்கிறது அந்தப் படத்துக்காக அவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!