லைகா தயாரிப்பில் அதர்வா நடிக்கும் புதுப் பட பூஜை!

லைகா தயாரிப்பில் அதர்வா நடிக்கும் புதுப் பட பூஜை!

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் புதிய படமான 22 வது படத்தை, இயக்குனர் A.சற்குணம் எழுதி இயக்குகிறார். அதர்வா, ராஜ் கிரண் நடிக்கிறார்கள். நாயகியாக முன்னனி கதாநாயகி ஒருவர் நடிக்கிறார். ராதிகா சரத்குமார், R.K.சுரேஷ், ஜெயபிரகாஷ், துரை சுதாகர் (களவாணி 2 வில்லன்), சிங்கம் புலி, ரவி காலே (கன்னடம்). சத்ரு(கடைக்குட்டி சிங்கம் வில்லன்), பால சரவணன், ராஜ் ஐயப்பா , G.M.குமார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

“இந்தப் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ படங்களைப் போலவே குடும்பப் பின்னணி கொண்ட படமாக இருக்கும். படத்தில் அதர்வாவின் தாத்தாவாக ராஜ்கிரன் நடிக்கிறார். அதர்வா புதிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்கிரண் இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களைக் கொண்டிருப்பார். நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே, கடைகுட்டி சிங்கம் புகழ் சத்ரு, பாலா சரவணன், ஜி.எம்.குமார் ஆகியோருடன் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெற்றிலைக்கு நம் கலாச்சாரத்தில் பெரும் முக்கியத்துவம் உண்டு. எனவே படத்தில் நாங்கள் அதைத் தொட்டுள்ளோம், படத்தை ஒரு வெற்றிலைப் பண்ணையிலும், காவேரி நதிக்கு அருகிலும், திருவையாறுவிலும் அதைச் சுற்றியும் படமாக்கவுள்ளோம்” அப்படீன்னு கட்டிங் கண்ணையாவிடம் இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.

லைகா புரடக்ஷன்ஸ் தலைமை செயல் அலுவலர் G.K.M.தமிழ்குமரன் கட்டமைக்க, நிர்வாக தயாரிப்பை சுப்பு நாராயன் மேற்கொள்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், பெரும் வரவேற்பை பெற்ற மலையாள படமான உஸ்தாத் ஓட்டல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட் -ராஜா முகமது, ஆர்ட் – J.K.ஆண்டனி, காஸ்ட்யூமர்-நட்ராஜ், மேக்கப் மேன்-K.P.சசிகுமாரும், Stills-மூர்த்தி மௌலியும். பாடல்கள் -கவிஞர் விவேகா, மணி அமுதவன், நடனம்-பாபி ஆண்டனி, தயாரிப்பு மேற்பார்வை – M.காந்தன், PRO – சுரேஷ் சந்திரா, ரேகா D’One.

Related Posts

error: Content is protected !!