June 2, 2023

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு? – எக்ஸ் ஹெல்த் செகரட்டரி எச்சரிக்கை!

ரொனா தொற்று பரவல் அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும் என அரசின் முன்னாள் சுகாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு, கொரோனா பாதிப்பு அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இது அரசு மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு உள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்தது. இதனி டையே, இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு தேவையில்லை என்றும், ஆனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் அவசியம் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் ஊரடங்கு நடவடிக்கைகள் விரைவில் கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசின் முன்னாள் சுகாதார ஆலோசகர் Neil Ferguson தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த பிப்ரவரி மாதம் நமது நாட்டில் பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கை அளவுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டால், அடுத்த 3 வாரங்களில் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். இதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

இவர் கடந்த மே மாதம் வரை அரசின் ஆலோசகராக இருந்துள்ளார். ஊரடங்கு விதிமுறைகளை இவர் மீறியதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அதன்பிறகு அவர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.