June 2, 2023

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கொரோனா ரத்தப் பரிசோதனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 75-யை எட்டி உள்ளது. கடந்த 12 நாட்களாக இந்தியா நாடு தழுவிய ஊரடங்கை கடைத்த பிறகும் மொத்த எண்ணிக்கை 3000-யை தாண்டி வருகிறது. இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள 50 கோடி பயனாளிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை இலவசமாக குறிப்பிட்ட மருத்துவமனைகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தலைமை நிர்வாகியான டாக்டர் இந்து இந்த தகவலை தெரிவித்தார்.

நம் நாட்டில் கடந்த 12 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக 302 பேர் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து என்ற புதிய அறிவிப்பு ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374 இவர்களில் 667 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 70 பேர் உயிரிழந்து விட்டனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிப்பு உண்டா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலை அரசு அறிவித்துள்ளது.

அந்த மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவசமாக ரத்தப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று உள்ளதா என்பதை சோதிக்க பரிசோதித்து அறிவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு இந்த முடிவை மத்திய அரசு எடுத்ததாக கூறப்படுகிறது.