எம் எல் ஏ அலுவலகங்களை பூட்டியாச்சா? – மாநில தேர்தல் ஆணையம் ஆர்டர்

எம் எல் ஏ அலுவலகங்களை பூட்டியாச்சா? – மாநில தேர்தல் ஆணையம் ஆர்டர்

கவுன்சிலர், எம்எல்ஏ அலுவலகங்களை பூட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

local body ellection office

இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்(மாநகராட்சி, நகராட்சிகள், மூன்றாம் நிைல நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய குழுக்கள் மற்றும் கிராம ஊராட்சிகள்) அலுவல்சாரா உறுப்பினர்கள், உதாரணமாக, அரசியல் தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும் சட்டப்பூர்வமான கூட்டங்கள் அந்தந்த அமைப்புகளின் மூத்த அலுவலர்கள் தலைமையில் தான் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டங்களில் வறட்சி, வெள்ள நிவாரணம் மற்றும் இது போன்ற மிக அவசரமான தேவைகள் குறித்து மட்டுமே விவாதிக்கலாம். கூட்ட நடவடிக்கைகள் குறித்து நாளிதழ்களுக்கு செய்தி வழங்குதலோ புதிய திட்டங்கள் மற்றும் நிதி வழங்குதல் தொடர்பாகவே இக்கூட்டங்களில் விவாதிக்க கூடாது.

மனு நீதி நாள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவைகள் தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. அரசு நிதியில் இருந்து கட்டப்பட்ட சட்டப்பேரவை அலுவலகங்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்த கூடாது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இக்கட்டடங்களை பூட்டி தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களை சேர்ந்த கட்டடங்கள், அறைகளும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட எந்த ஒரு அரசியல் கட்சியினராலும் பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு வாகனங்களை அவர்களிடமிருந்து திரும்ப பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் அைனத்தும் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து நடைமுறைக்கு வருகிறது”  என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts