சித்தா -விமர்சனம்!
நம் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது. இத்தனைக்கும் இங்கு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், எங்கேயும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள். ஆதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இச்சூழலில் சித்தப்பா – மகள் இடையிலான உறவை மையப்படுத்திய கதையில் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களையும் அதன் பின்னணியையும் இணைத்து ஒரு சிறுமிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையின் கோரத்தைக் கொடுமையான காட்சிகயைக் கோர்த்து, ஒரு பரபரப்பான த்ரில்லரை வழங்க முயற்சித்துள்ளனர் சித்தா டீம்.
அதாவது அப்பாவை இழந்த சுந்தரி. எடே வயதான அவள் மீது ஈஸ்வரனுக்கு உயிர். சுந்தரிக்கும் தான் ‘சித்தா’ என்று அழைக்கும் தன் சித்தப்பா ஈஸ்வரன் என்றால் கொள்ளை பிரியம்.. இந்நிலையில், சுந்தரியின் தோழிக்கு ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. அப்படி செய்தது ஈஸ்வரன் என்ற அவப் பெயருடன் போலீஸ் வரை சிக்கலில் மாட்டுகிறான். ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அதே கெட்டது சுந்தரி வீட்டிலும் நடக்கிறது. இதை அடுத்து நிகழ்வதே சித்தா கதை.
விடலையான பாய்ஸ் தொடங்கி.சித்தார்த் இதுவரை ஏகப்பட்ட படங்கள் நடித்திருக் கிறார் அதிலெல்லாம் ஒரு நடிகராகவே தெரிந்திருக்கிறார். ஆனால் சித்தா படத்தில் சித்தா என்ற கேரக்டராகவே மாறியிருக்கிறார். அண்ணன் குழந்தை மீது சித்தார்த் காட்டும் அளவில்லா அன்பு அரங்கு முழுவதும் பரவுகிறது. வகுப்பில் முட்டி போட வைத்ததற்காக பிரின்ஸ்பாலிடம் கோபம் காட்டும் சித்தார்த் குழந்தையை வண் யில் அமர்த்திக்கொண்டு ஊர் சுற்றுவதும், அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வதுமாக ஒரு தந்தைபோல் பாசத்தை வெளிப் படுத்தி கவர்வதில் ஸ்கோர் செய்து விடுகிறார். நாயகி நிமிஷா சஜயன், தன்னுடைய எல்லா காட்சிகளிலும் தன் அழுத்தமான நடிப்பை வழங்கி கதைக்கருவிற்கு வலுச்சேர்த்திருக்கிறார். அதிலும் அவரின் கேரகடர் மூலம் பல சேதிகளை கடத்தி இருக்கிறார்.
கதையில் முதுகெலும்பாக வரும் சிறுமி சிறுமி சஹஷ்ரா ஶ்ரீ மற்றும் எஸ்.ஆபியா தஷ்னீம் ஆகியோரின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. . இந்த சிறுமிகளின் இயல்பான நடிப்பு திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. அதிலும், சித்தார்த்தின் அண்ணன் மகளாக நடித்திருக்கும் சஹஷ்ரா ஶ்ரீ காணாமல் போன பிறகு எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும், படம் முடிந்து வெளியே வந்த பின்னரும் மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்ததே நிஜம். சித்தார்த்தின் ஃப்ரண்ட்ஸூகளாக நடித்த நடிகர்கள், அண்ணியாக வம் அஞ்சலி நாயர், வில்லனாக நடித்திருக்கும் நடிகர் என மெயின் ரோல் தொடங்கி சின்ன கேரக்டர்கள் வரைக்குமான நடிகர்கள் தேர்வு, அவர்களிடமிருந்து இயல்பான நடிப்பை வாங்கிய விதம் எல்லாம் அபாரம்.
கேமராமேன் பாலாஜி சுப்பு பழனியை அதன் அழகியலுடன் படமாக்கியிருக்கும் பாணியே அசத்துக்கிறது. இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பாடல் – குறிப்பாக கணகள் ஏதோ சாங் இனிமையாக இருப்பதோடு, கதையோட்டத்திற்கு ஏற்றவாறும் அமைந்திருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை திரைக்கதையின் அழுத்தத்தை சிதைக்காமல் பல இடங்களில் அமைதியே பலம் என்பதை புரிந்து பயணித்திருப்பது கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.’
‘குட் டச் – பேட் டச்’ குறித்து விளக்குவது தொடங்கி பல விஷயங்களை எளிமையாக எல்லாருக்கும் புரியும் படி காட்சி அமைத்த இயக்குநர் சிலபல தேவையில்லாத காட்சிகளைக் கோர்த்து பேமிலிடன் பார்க்கத் தகுந்த சினிமாவைக் கெடுத்து விட்டார்.!.
மொத்தத்தில் இந்த சித்தா -அடெல்ட் அவெர்னெஸ் மூவி
மார்க் 3/5