சந்திரயான்-2 அனுப்பிய தகவல்களைப் பார்க்க வேண்டுமா?

சந்திரயான்-2 அனுப்பிய தகவல்களைப் பார்க்க வேண்டுமா?

சந்திரயான்-2 விண்கலம் வாயிலாக கிடைத்த தகவல்களை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆக.,20ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்த சந்திரயான்-2 விண்கலம், நிலவில் இறங்குவதற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது.

எனினும் விண்கலத்தின் ஆயுள் ஓராண்டு இருந்ததால், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து இயங்கியது. நிலவின் சுற்றுப்பாதையில் பல படங்கள் மற்றும் அறிவியல் தரவு களை இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறைக்கு சந்திரயான்-2 விண்கலம் அனுப்பி யுள்ளது. அப்போது நிலவின் துருவப் பகுதிகளில் நீர்பனி இருப்பது போன்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றன. சுமார் 1,056 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பின் 22 சுற்றுப்பாதைக்கான படங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-2 அனுப்பிய தகவல்கள் இப்போது இஸ்ரோவின் இணையதளம் உட்பட (isro.gov.in/update/24-dec- issdc.gov.in pradan.issdc.gov.in) ஆகிய நான்கு இணையதளங்களில் இஸ்ரோவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!