32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 12 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 12)
‘தலைமைச் செயலகம்’படத்தில் அடடே சொல்ல வைத்த  ஆக்டர் நிரூப் நந்தகுமார்! Exclusive

‘தலைமைச் செயலகம்’படத்தில் அடடே சொல்ல வைத்த ஆக்டர் நிரூப் நந்தகுமார்!

தனது வசீகரிக்கும் தோற்றத்தோடு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நடிகர்கள் பார்வையாளர்களின் மனதில் தனி இடம் பிடிப்பார்கள். இதில் நடிகர் நிரூப் நந்தகுமாரும் ஒருவர். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ’தலைமைச் செயலகம்’ வெப்சீரிஸில் நடித்திருக்கும் நிரூப்பின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த வெப் தொடரின் ஒரு பகுதியாக இருந்ததன் சிறந்த அனுபவம் பற்றி நடிகர் நிரூப் பகிர்ந்து கொண்டதாவது, “அனுபவம் வாய்ந்த இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் ஹரிஹரன் என்ற […]

May 20, 2024 admin
தலைமைச் செயலகம் – வெப் சீரீஸ் =விமர்சனம்! Exclusive

தலைமைச் செயலகம் – வெப் சீரீஸ் =விமர்சனம்!

தமிழில் பெரும்பாலும் அரசியல் சினிமாக்கள் கொஞ்சம் கம்மிதான்,  இச்சூழலில் அரசியலின் பின்னணியில் நடைபெறும் அதிரி புதிரி கதைகளை வைத்துக்கொண்டு ஒரு முழு சீரிசை முயன்று பார்த்திருக்கிறார்கள்.ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமாரும், சரத்குமாரும் தயாரித்திருக்கும் இந்தத் தொடரை வசந்த பாலன் இயக்கி இருக்கிறார். கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், பரத், ஆதித்யா மேனன், சந்தான பாரதி, கவிதா பாரதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியல் என்று கதையில் சொல்லப்பட்டாலும் அதில் ஆந்திர […]

May 19, 2024 admin
‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோவை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு! Exclusive

‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோவை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு!

சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்திலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நாட்டியம், நடனம் என்பது இளம் வயதினருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பு வழங்கும் கலையாக இருந்தாலும்.. அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், சமூகத்துடன் […]

May 13, 2024 admin
யுவன் சங்கர் ராஜா பாடி, இசையமைத்து, நடித்திருக்கும்  மியூசிக் ஆல்பம் -‘ மணி இன் தி பேங்க்’ Exclusive

யுவன் சங்கர் ராஜா பாடி, இசையமைத்து, நடித்திருக்கும் மியூசிக் ஆல்பம் -‘ மணி இன் தி பேங்க்’

இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களுக்கு புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா, ‘மணி இன்‌ தி பேங்க்’ எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘மணி இன் தி பேங்க்’ எனும் […]

May 7, 2024 admin
சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’! Exclusive

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன. இதற்கு ஒரு தீர்வாக வந்தவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது. […]

May 4, 2024 admin
ஸ்ருதிஹாசனின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை Exclusive

ஸ்ருதிஹாசனின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான  பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகமானர். நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஸ்ருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் […]

April 23, 2024 admin
‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ – பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர்! Exclusive

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ – பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர்!

நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து. நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ரிஷி இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. மும்பை, இந்தியா- 2024, ஏப்ரல் 18 – இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் […]

April 19, 2024 admin
சரிகமா ஒரிஜினல்ஸ் வழங்கும் “எண்ட ஓமனே” மனம் மயக்கும் ஆல்பம் பாடல்! Exclusive

சரிகமா ஒரிஜினல்ஸ் வழங்கும் “எண்ட ஓமனே” மனம் மயக்கும் ஆல்பம் பாடல்!

உலகளவில் இசைத்துறையில் ஆளுமைமிக்க நிறுவனமாக, பல்லாண்டுகளாக கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் “சரிகமா”. திரை இசைப் பாடல்கள் மட்டுமின்றி, சுயாதீன இசையை தொடர்ந்து ஆதரித்து வரும் சரிகமா , பல புதுமையான ஆல்பங்களையும், சுயாதீன கலைஞர்களின் பாடல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் கொண்டாடி மகிழும் “எண்ட ஓமனே” எனும் புது ஆல்பம் பாடலை தற்போது வெளியிட்டுள்ளது. கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில், கேரள திருமண வீட்டின் […]

April 18, 2024 admin
புதிய தலைமுறையின் ‘ஜனநாயகப் பெருவிழா’-தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பயணிக்கும் பிரத்யேக பேருந்து! Exclusive

புதிய தலைமுறையின் ‘ஜனநாயகப் பெருவிழா’-தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பயணிக்கும் பிரத்யேக பேருந்து!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகப் பெருவிழாக்களில் ஒன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது புதிய தலைமுறை. இதற்காக தொலைக்காட்சியில் உள்ள எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் வகையில் சிறப்புப் பேருந்து ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஜனநாயகப் பெருவிழா’ என்ற பெயரில், ‘தேர்தல்னா புதியதலைமுறை‘ என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் புறப்பட்டு வருகிறது புதிய தலைமுறையின் தேர்தல் பேருந்து. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளுக்கும் இப்பேருந்து பயணிக்கும். […]

March 29, 2024 admin
”என் திரைப்பயணத்தில் ”இனிமேல்” ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பு” – லோகேஷ் கனகராஜ் Exclusive

”என் திரைப்பயணத்தில் ”இனிமேல்” ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பு” – லோகேஷ் கனகராஜ்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன்  வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பதிலளித்தனர். இந்நிகழ்வில் இசையமைப்பாளர் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் பேசியது, எல்லோருக்கும் வணக்கம். முதலில் நான் “இனிமேல்” என்கின்ற இந்தப் பாடலை […]

March 26, 2024 admin
உடனடி செய்திகள்