32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 199 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 199)
கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க தமிழக சட்டசபை ஜனவரியில் கூடுகிறது! Running News

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க தமிழக சட்டசபை ஜனவரியில் கூடுகிறது!

தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு தலைப்பு செய்தி அளிக்கும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி முதல் வாரம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. அதற்கு மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த பின்னர் விவாதம் நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடுவது வழக்கம். அதபோல் இப்போது ஜனவரி மாதம் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி பன்வாரிலால் புரோகித் உரையாற்றியதும் அதற்கு […]

November 10, 2018 admin
நேரம் காலம் இல்லாமல் பட்டாசு வெடித்த ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு! தமிழகம்

நேரம் காலம் இல்லாமல் பட்டாசு வெடித்த ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு!

ஒரு வழியாக கடந்து செல்லும்  தீபாவளி பண்டிகையாகிய இன்று (நவம்பர் 6) உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்ததற்காக தமிழகம் முழுதும் சுமார் ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்களில் தெரிவித்தார்கள். காற்று மாசுபாட்டைக் குறைக்க தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டுமென்ற பொது நல வழக்கின்மீது கடந்த மாதம், ‘தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்’ என்று […]

November 6, 2018 admin
தடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாசம் ஜெயில்! – போலீஸ் எச்சரிக்கை! Running News

தடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாசம் ஜெயில்! – போலீஸ் எச்சரிக்கை!

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு […]

November 4, 2018 admin
உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம்! – ஜேப்பியார் கல்லூரியில் கமல் பேச்சு Running News2

உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம்! – ஜேப்பியார் கல்லூரியில் கமல் பேச்சு

Ghibbie Comic cinemas சார்பில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத,  ஜிப்ரான் இசை அமைத்திருக்கும் “Get your freaking hands off me” என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்பு பேருரை ஆற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். முன்னதாக ஜேப்பியார் கல்லூரி முதல்வர் வேணுகோபால் வந்திருந்த சிறப்பு […]

November 3, 2018 admin
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை ! தமிழகம்

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை !

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் வழங்க வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் வரும் 5ஆம் தேதியன்று இரவு 8 மணி முதல் 6ஆம் தேதி மாலை 8 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் சட்ட விரோதமானது என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2014, 2015, 2016, 2017ஆம் […]

November 1, 2018 admin
திருநங்கை திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கோயில் நிர்வாகம்! தமிழகம்

திருநங்கை திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கோயில் நிர்வாகம்!

உப்பு நகரம் என்றும் ஸ்டெரிலைட் சிட்டி அப்படீனும் அடையாளபடுத்தப்படும் தூத்துக்குடியிலே பாலமுத்து நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம், சுப்புலட்சுமி தம்பதியோட மவன் அருண்குமார். சத்ர்ன் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வாரார். அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிராமன் வள்ளி தம்பதிகளின் மகள் ஸ்ரீஜா. இவர் திருநங்கை ஆவார். வ.உ.சி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த ஸ்ரீஜாவுக்கும், அருண்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி திருமணமும் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் […]

October 31, 2018 admin
முதியோர் ஓய்வுதியம் மணியார்டர் மூலமே வழங்கப்படும்! – எடப்பாடி அறிவிப்பு! தமிழகம்

முதியோர் ஓய்வுதியம் மணியார்டர் மூலமே வழங்கப்படும்! – எடப்பாடி அறிவிப்பு!

தமிழகத்தில் 80 வயதை கடந்த 1 லட்சத்து 83 ஆயிரம் முதியோருக்கு பண அஞ்சல் மூலமாக வீடுகளுக்கே சென்று ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு இன்று ஆணையிட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ”தமிழ் நாட்டில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரான 60 வயது கடந்தமுதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், வேளாண் தொழிலாளர்கள், ஏழைவிவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் தற்போது […]

October 31, 2018 admin
ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லையே! – தமிழக அரசு சான்றிதழ்! Running News

ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லையே! – தமிழக அரசு சான்றிதழ்!

 சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடை கோரும் வழக்கில் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என்பதால், அரசு செலவில் அவருக்கு நினைவிடம் கட்டுவதில் விதி மீறலோ, சட்டவிரோதமோ இல்லை என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி அமைந்துள்ள இடத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அரசு செலவில் நினைவிடம் கட்ட அறிவிப்பு வெளியானது. இதையடுத்து நினைவிடம் […]

October 31, 2018 admin
சிக்கனம் அவசியம் : சேமிப்பு முக்கியம்! – முதல்வர் எடப்பாடி சொல்கிறார்! தமிழகம்

சிக்கனம் அவசியம் : சேமிப்பு முக்கியம்! – முதல்வர் எடப்பாடி சொல்கிறார்!

சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து பொதுமக்கள் சிறுசேமிப்பு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவத்துள்ளார்! இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் “உலக சிக்கன தினம்” கொண்டாடப்படுகிறது “அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்ற குறளில் வள்ளுவர் பெருந்தகை, பொருளின் அளவு அறிந்து சிக்கனமாக வாழ்தலின் அவசியத்தை குறிப்பிடுகிறார். சிக்கனமும், சேமிப்பும் ஒன்றோடொன்று […]

October 29, 2018 admin
மணல் வாங்குவோரின் வீடுகளுக்கே சென்று விற்பனை!- அரசு அறிவிப்பு! Running News

மணல் வாங்குவோரின் வீடுகளுக்கே சென்று விற்பனை!- அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் எதெதற்கோ சிண்டிகேட் போட்டி டிமாண்டை ஏற்படுத்து போல் ஆற்று மணலுக்கும் மாஃபியா கும்பல் குறி வைத்து தட்டுப்பாடை ஏற்படுத்தியது. இதை கவனத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வீட்டிற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப் படவுள்ளது என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை நேற்று(அக்டோபர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல், அடுத்த ஆண்டு முதல் மணல் வாங்கு வோரின் வீடுகளுக்கே […]

October 28, 2018 admin
உடனடி செய்திகள்