32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 142 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 142)
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்! தமிழகம்

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்!

பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜகவின் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அத்துடன் மேற்கு வங்காளம் அதைத் தொடர்ந்து கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக […]

October 28, 2020 admin
திருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை! தமிழகம்

திருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை!

ஊரடங்கு தடையை மீறி சிதம்பரத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு, பாஜக மாநில பொதுச்செயாளர் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மகளிரணி அழைப்பு விடுத்திருந்தது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், விசிக தலைவர் திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை […]

October 27, 2020 admin
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்! தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த ரத்தக் கறைகள் ஜெயராஜ் – பென்னிக்ஸ் டி.என்.ஏவுடன் ஒத்துப்போவது தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்கள் வெளியாகி உள்ளன. அதில், காவல் நிலையத்தின் கழிப்பறை, சுவர்கள் லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை – மகன் இருவரது ரத்தம் படிந்திருந்தது என்றும், தடயவியல் பரிசோதனையில் அந்த ரத்தக் கறைகள் இறந்துபோன […]

October 26, 2020 admin
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இந்தாண்டே இடஒதுக்கீடா? நோ – சுப்ரீம் கோர்ட்! தமிழகம்

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இந்தாண்டே இடஒதுக்கீடா? நோ – சுப்ரீம் கோர்ட்!

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடப்பு ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், கடந்த ஜூலை 27-இல் […]

October 26, 2020 admin
வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுக்கு . 90 சதவிகித நுரையீரல் பாதிப்பு! தமிழகம்

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுக்கு . 90 சதவிகித நுரையீரல் பாதிப்பு!

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் உடல் நிலை பாதிப்படைந்துள்ளதால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவல் கிடைத்ததை அடுத்து முதல்வரைக் கண்டு துக்கம் விசாரிக்க அமைச்சர் துரைக்கண்ணு சென்னையிலிருந்து சேலம் கிளம்பிச் சென்றார். கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் […]

October 25, 2020 admin
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 மாச அவகாசம்! தமிழகம்

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 மாச அவகாசம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறப்பட்ட புகாரை குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமியின் ஆணையத்திற்கு தற்போது ஒன்பதாவது முறையாக தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவர் சில உடல் உபாதைகளால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் பல மர்மம் […]

October 24, 2020 admin
இந்து பெண்களை விபச்சாரி எனக்கூறிய திருமாவளவன் மீது வழக்குப் பதிவு! தமிழகம்

இந்து பெண்களை விபச்சாரி எனக்கூறிய திருமாவளவன் மீது வழக்குப் பதிவு!

பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனுதர்மமானது இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறது என பெரியார் யூடியூப் சேனலுக்கு திருமாவளவன் பேட்டியளித்திருந்தார். சர்ச்சை குறித்த கருத்துக்களை பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் பல பகுதிகளில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் […]

October 23, 2020 admin
7.5% உள் ஒதுக்கீடு குறித்து பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை: முதல்வர் தமிழகம்

7.5% உள் ஒதுக்கீடு குறித்து பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை: முதல்வர்

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு சட்டத்திற்கு விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெவ்வேறு சமூக பொருளாதார பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் கற்கும் பள்ளி, வளரும் வீட்டுச் சூழல், பெற்றோர் வருமானம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, இவர்களை சமநிலையில் வைத்து […]

October 23, 2020 admin
வன்னிய இளைஞர்களே.. தயாராகுங்கள்- தனி இட ஒதுக்கீட்டு போராட்டத்து தயாராகும் ராமதாஸ்! தமிழகம்

வன்னிய இளைஞர்களே.. தயாராகுங்கள்- தனி இட ஒதுக்கீட்டு போராட்டத்து தயாராகும் ராமதாஸ்!

“வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுக்காக நடந்த போராட்டத்தின் உணர்வுகளை அவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள். அப் போது நாங்கள் பிறந்திருக்கவில்லையே என ஏராளமான இளைஞர்கள் ஏங்குவது எனக்குத் தெரியும். எங்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் சமுதாய நலனுக்காக மீண்டும் ஒரு போராட்டம் நடத்த மாட்டீர்களா அய்யா? என்று பலரும் என்னிடமே கேட்டிருக்கிறார்கள். அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் நாள் வந்துவிட்டது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பாட்டாளி இளைஞர்களே…. […]

October 22, 2020 admin
விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை :முதல்வர் திறந்துவைத்தார். – வீடியோ தமிழகம்

விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை :முதல்வர் திறந்துவைத்தார். – வீடியோ

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற் கொண்டு வரும் முதலமைச்சர் பழனிசாமி, தாயாரின் மறைவினால் அதனை தொடர முடிய வில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அவர், விராலிமலையில் சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்ற வெண்கல சிலையை திறந்து வைத்தார். கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டை பெருமிதப்படுத்தும் விதமாக இந்த சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பொதுமக்களின் 100 ஆண்டு கால கனவு […]

October 22, 2020 admin
உடனடி செய்திகள்