32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11701 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1151 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1151)
டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க போட்டி! Running News

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க போட்டி!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி தலைவர் விஜயகாந்த் வரும் 27-ந்தேதி டெல்லி செல்வதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறுகிறது. இதனால் டெல்லி அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தே.மு.தி.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யவும், டெல்லி ஜந்தர் மந்தர் […]

October 25, 2013 admin
ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்திய அன்னா குழுவின் ரூ.100 கோடி ஊழல்! Running News

ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்திய அன்னா குழுவின் ரூ.100 கோடி ஊழல்!

எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக அன்னா குழுவினர் 4 கோடி மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி ஊழல் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை சமூக சேவர் அன்னா கடந்த 2012ம் ஆண்டு தொடங்கினார். இதில் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, குமார் விஷ்வாஸ், மணீஷ் சிசோடியா உட்பட பல முக்கிய பிரபலங்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அபபோது அன்னா குழுவின் பிரசார நடவடிக்கை விவரங்களை […]

October 25, 2013 admin
ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்! Running News

ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!

டால்பின்கள், பாலூட்டி வகையை சார்ந்தவை. அவை சமுதாயமாக வாழும் தன்மை கொண்டவை. உணவைப் பெறுவதிலும், குட்டிகளைப் பராமரிப்பதிலும் அவை ஒன்றுக்கொன்று கூட்டாக செயல்படும். உலகில் 37 வகை டால்பின்கள் இருக்கின்றன. இவற்றில் 32 வகை டால்பின்கள் கடலில் வாழ்கின்றன. 5 டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன. டால்பின்கள் கடல் மட்டத்தில் இருந்து 260 மீட்டர் ஆழம் வரை வாழும் தன்மை பெற்றவை. அவை சுவாசிப்பதற்காக அடிக்கடி கடல்மட்டத்திற்கு வந்து `டைவ்’ அடித்துவிட்டுச் செல்லும். ஆபத்து சமயங்களில் 15 […]

October 25, 2013 admin
பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் ! Running News

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது. 1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் தேவையில்லை. நேராக மணி கிராம் கடைக்கு சென்று காசை கட்டி பேபால் அக்கவுன்ட்டில் வரவு வைத்து அனுப்ப வேண்டியவங்களுக்கு பேபால் மூலம் பணத்தை […]

October 25, 2013 admin
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை! Running News

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் கூறப்படவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் வருகை குறித்து இந்திய அரசு தான் முடிவு செய்யும். பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்தால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து பரிசிலீப்போம் என்றார். மேலும் காமன்வெல்த் மாநாட்டினை தவிர்த்தால் சர்வதேச சமூகத்தில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த […]

October 24, 2013 admin
’22 கேரட் தங்கத்தில் “டாய்லெட் பேப்பர்'”  ஆஸ்திரேலியாவில் சேல்ஸ்! Running News

’22 கேரட் தங்கத்தில் “டாய்லெட் பேப்பர்'” ஆஸ்திரேலியாவில் சேல்ஸ்!

பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட உயர் வர்க்கத்தினருக்காக, 22 கேரட் தங்கத்தினால் ஆன விலை உயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம். ‘டாய்லெட் பேப்பர் மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்த புதிய தயாரிப்பினை 22 கேரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. […]

October 24, 2013 admin
சட்டசபைத் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது- கவலை தருகிறது : வைகோ அறிக்கை Running News

சட்டசபைத் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது- கவலை தருகிறது : வைகோ அறிக்கை

“இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போரின் நியாயத்தின் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்ற விதத்திலும், மகத்தான தியாகங்கள் செய்து காட்டப்பட்ட இலக்கை, திசை மாற்றம் செய்யும் நோக்கிலும் அமைந்து இருப்பதால், இத்தீர்மானம் மனநிறைவைத் தரவில்லை; ஏமாற்றம் அளிக்கிறது”என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (24.10.2013), தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் இதுகுறித்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, சட்டமன்றம் முழுமனதாக நிறைவேற்றி இருக்கிறது. முதலமைச்சர் உரையையும், […]

October 24, 2013 admin
‘அங்குசம்’டைரக்டர் மனுகண்ணன் மீது(ம) அவதூறு வழக்கு! Running News

‘அங்குசம்’டைரக்டர் மனுகண்ணன் மீது(ம) அவதூறு வழக்கு!

நாட்டில் இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் இந்த சட்டத்தை ஒரு சிலர் மட்டுமே சரியாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களும் மிரட்டப்படுகிறார்கள். மக்களிடம் இந்த சட்டம் பற்றி விழிப்புணர்வு இல்லை. இதனை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகி இருககிறது. படத்தின் பெயர் அங்குசம். ஸ்கந்தா, ஜெய குஹா போன்ற நியூபேஸ்கள் நடித்த படத்திற்கு மனுகண்ணன் என்பவர்தான் புரட்யூசர் & டைரக்டர். முடிவடைந்து சென்சாரும் வாங்கிய அந்தப் படத்திற்கு […]

October 24, 2013 admin
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது!- தமிழக அரசு தீர்மானம்! Running News

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது!- தமிழக அரசு தீர்மானம்!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில், “ல், “2009 ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் […]

October 24, 2013 admin
கடலில் மீன் பண்ணை அமைத்து ஆதாயம் தேட விருப்பமா? Running News

கடலில் மீன் பண்ணை அமைத்து ஆதாயம் தேட விருப்பமா?

மீனவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் கடலுக்குள் மீன் வளர்ப்புப் பண்ணை வைத்து வருவாய் ஈட்டும் புதிய திட்டத்தை தேசிய கடல்வளர் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்லாமல், கடற்கரையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மீன் பிடிக்கலாம். இந்த கடல் மீன் பண்ணைகளின் மூலம் 3 மாதத்தில் இருந்து 8 மாதத்துக்குள் 10 டன் வரை மீன் உற்பத்தி செய்ய முடியும். கிளி மீன், பால கெண்டை, கொடுவா, […]

October 24, 2013 admin
உடனடி செய்திகள்