32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11701 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1138 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1138)
ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் பணி! Running News

ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் பணி!

ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை நிறுவனம் (APSRTC) ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 107+37(wait list) பணி: ஓட்டுநர் வயதுவரம்பு: 01.07.2013 தேதிப்படி 22 – 35-க்குள் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: Driving Test மற்றும் Medical Fitness test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. விண்ணப்பிக்கும் முறை: விரும்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.apsrtc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து […]

November 10, 2013 admin
மிஸ் யுனிவர்ஸ்:2013 பட்டத்தை வென்றார் வெனிசுலா கேப்ரியேலா இஸ்லர்! Running News

மிஸ் யுனிவர்ஸ்:2013 பட்டத்தை வென்றார் வெனிசுலா கேப்ரியேலா இஸ்லர்!

ரஷ்யாவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 25 வயதான வெனிசுலா நாட்டு அழகி கேப்ரிலா இஸ்லர் தேர்வானார். இவர் வெனிசுலாவில் டி.வி., தொகுப்பாளினியாக இருந்தவர். பிரபஞ்சத்தின் சிறந்த அழகியை தேர்வு செய்யும் ‘மிஸ் யூனிவர்ஸ்-2013’ போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.இந்திய அழகியாக தேர்வான மானசி மோகே உள்பட 86 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். பல நாடுகளை சேர்ந்த பல்துறை பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்ற இந்த 62வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ‘மிஸ் […]

November 10, 2013 admin
கள்ளத்தொடர்பு வலைதளத்துக்கு தடை போட்ட சிங்கப்பூர் ! Running News

கள்ளத்தொடர்பு வலைதளத்துக்கு தடை போட்ட சிங்கப்பூர் !

கனடாவை சேர்ந்த ஒரு பிரபல வலைதள நிறுவனம் (வெப்சைட்) கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிகளும், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன்களும் தனிமையில் சந்தித்து கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளும் சேவையை செய்து வருகிறது.மேற்கத்திய நாடுகளில் தற்போது பரவலாகி வரும் இந்த ‘டேட்டிங் சீட்டிங்’ கலாசாரத்தை கடைசரக்காக்கி லாபம் பார்க்கும் அந்த வலைதளம், இந்தியா உள்ளிட்ட ஏராளாமான நாடுகளில் பிரத்யேக ‘சேவை’யை செய்து வருகிறது. இவ்வகையில், சிங்கப்பூர் மக்களுக்கு என பிரத்யேக சேவையை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அந்த […]

November 10, 2013 admin
சி.பி.ஐ. சட்டப்பூர்வமானதல்ல என்ற கவுகாத்தி ஹைகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை Running News

சி.பி.ஐ. சட்டப்பூர்வமானதல்ல என்ற கவுகாத்தி ஹைகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

சி.பி.ஐ சட்டப்பூர்வமானது அல்ல என்று அண்மையில் கவுகாத்தி ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கவுகாத்தி ஹைகோர்ட்டின் உத்தரவிற்கு தடை விதித்தது. நவேந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த சி.பி.ஐ.க்கு எதிரான வழக்கு கவுகாத்தி ஹைகோர்ட்டில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்தது. அதில் சி.பி.ஐ. அமைப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்று கவுகாத்தி கோர்ட்டு நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பு காரணமாக […]

November 9, 2013 admin
பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள்! Running News

பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள்!

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட ஆஸ்திரேலியாவாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகைய தெய்வ உருவங்களை மதுபாட்டில்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். அங்குள்ள இந்து மத யுனிவர்சல் சொசைட்டியின் தலைவரான ராஜன் செட் இதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்துமதக் கடவுள்கள், கருத்துகள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றை […]

November 9, 2013 admin
உலககோப்பை ஹாக்கியை நடத்தும் வாய்ப்பை பெற்றது இந்தியா! Running News

உலககோப்பை ஹாக்கியை நடத்தும் வாய்ப்பை பெற்றது இந்தியா!

சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது.இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறும என்று தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்த உரிமம் கேட்டு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. ஆண்கள் உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு ஹாக்கி இந்தியா அனுமதி கோரி […]

November 9, 2013 admin
பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா? Running News

பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?

சென்னை மாநகராட்சியின் மூலம் பிறப்பு – இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் இணைய தளத்தில் இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுவரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இனிமேல் தமிழிலும் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய ஏற்பாட்டினை செய்துள்ளது. பிறப்பு – இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் இன்று மேயர் தொடங்கி வைத்தார்.இனி http://www.chennaicorporation.gov.in/Tamil/index.htmஇணையதளத்தில் இன்று முதல் தமிழ் பிறப்பு […]

November 9, 2013 admin
குடிசை வீட்டில் வறுமையில் வாழும்  90 வயது இளவரசி – மியான்மர் சோகம் Running News

குடிசை வீட்டில் வறுமையில் வாழும் 90 வயது இளவரசி – மியான்மர் சோகம்

மியான்மர் நாட்டின் அரசபரம்பரையைச் சேர்ந்த கடைசி இளவரசி குடிசை வீட்டில் வறுமையில் வசித்து வருவதாகவும் 60 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசியாக வலம் வந்த இவர் தற்போது அண்டை வீட்டாருக்கு கூட யார் என்று தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் முன்பு மன்னர் ஆட்சி நடந்தது. திபா என்பவர் கடைசி மன்னராக இருந்தார்.ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது கடந்த 1885–ம் ஆண்டில் இவரது அதிகாரம் பறிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மியான்மரில் ராணுவ […]

November 9, 2013 admin
பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார்! Running News

பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார்!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் புறக்கணிப்பு அறிவிப்பை விரைவில் மத்திய வெளியறவுத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் வருகிற 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், […]

November 9, 2013 admin
முள்ளிவாய்க்கால் முற்றத்தை என் உயிர் உள்ளவரை காப்பேன்.- வை கோ சபதம் Running News

முள்ளிவாய்க்கால் முற்றத்தை என் உயிர் உள்ளவரை காப்பேன்.- வை கோ சபதம்

“தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்காக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுச்சி கொடுக்கும். இதனை யாரும் இடிக்கவோ, தகர்க்கவோ நினைத்தால் விடமாட்டோம். இங்கு உள்ள ஒவ்வொரு தமிழனும், தமிழ் உணர்வுகள் உள்ள இளைஞர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.இது ஒரு வீர வணக்கம் செலுத்தும் நினைவு தூண் போன்றது. இதை என் உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன். ” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இலங்கையில் நடந்த போரில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறுதி […]

November 9, 2013 admin
உடனடி செய்திகள்