Exclusive
மனதின் ஓசை முதல் ஆடம்ஸ் ஆப்பிள் வரை-உலக குரல் தினம் 2026 சிறப்புப் பார்வை!
“குரல்” என்பது வெறும் ஒலி அலைகளின் தொகுப்பு மட்டுமல்ல; அது ஒரு மனிதனின் ஆளுமைத் தளம். பொதுவாக மனதின் ஓசைதான் மனிதக் குரலாக வெளிப்படுகிறது என்றாலும், இந்தக் குரல் உருவாகும் உடலியங்கியல் (Physiology) மிகவும் சிக்கலானது. தொட்டிலில் வெறும் அழுகையாய் அரும்பும் மழலையின் குரல், காலப்போக்கில் மெல்லிய சிரிப்பொலியாக மலர்கிறது. ‘அம்மா’ எனும் முதல் சொல்லில் தொடங்கி, பின் சிறு சிறு சொற்களாக கிளைவிட்டு, கேட்டதைத் திரும்பச் சொல்லும் மழலை மொழியில் முகிழ்த்தது. முடிவில், வளர்ச்சியின் பாதையில் […]