Exclusive
உணவு விரயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
இன்று மனிதகுலம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ஒரு சமூக அநீதி. உலகின் 800 கோடி மக்கள் தொகையில் சுமார் 300 கோடி மக்கள் பசியுடன் உழன்று வருகின்றனர். அதாவது 40 சதவிகிதம் மக்கள் போதிய சத்தான உணவு இல்லாமல்தான் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் 82 கோடி மக்கள் தினமும் பசியுடன் தான் தூங்கச் செல்கின்றனர். இந்நிலையில்தான், கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]