முத்தலாக் அவசர சட்டம்! – மோடி அமைச்சரவை ஒப்புதல்!
தற்போதும் முத்தலாக் எனும் பெயரில் முஸ்லிம்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தமுறை குர்ஆனில் இல்லை எனும் போது அது உருவானது எப்படி என்று இணையத்தில் ஆராய்ந்த போது இதற்கு வட இந்தியாவில் ஒரு வரலாற்று சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
இதன்படி, கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவின் இரண்டாவது கலிபாவான ஹசரத் உமரின் ஆட்சிக்காலத்தில் எகிப்தில் ஏற்பட்ட ஒரு சமூகப் பிரச்சினையால், அதிக எண்ணிக்கை யிலான பெண்கள் தம் கணவன்மார்களை விட்டு விலக விரும்பினர். இதற்காக அவர்கள் ஹசரத் உமரிடம் நீதி கேட்டு சென்றனர். அவர் மக்கள் நீதிமன்றம் போல் ஒரு சபை கூட்டி நவீனமுறையில் அவர்கள் கணவன்மார்களால் ஒரே மூச்சில் மூன்று முறை தலாக் கூறச் செய்து உடனடியாக விவாகரத்து பெற்றுத் தந்தார்.
அப்போதைய சூழலில் செய்யப்பட்ட இது முழுக்க, முழுக்க ஒரு தற்காலிக ஏற்பாடு ஆகும். இங்கு கூறப்பட்ட மும்முறை தலாக்கை தவறாகப் புரிந்துகொண்ட சில ஆண்கள் மற்றும் அது தங்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கருதியவர்களும் அதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். ஒரே சமயத் தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறானது என பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இதனை மதரஸா படிப்பாளிகள், மவுலானாக்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சி பிரமுகர்களும் ஏற்காமல் இல்லை. ஆனால், இவர்கள் அனை வருமே முத்தலாக் எனும் பெயரில் தன் கண்முன் நிகழ்ந்த கொடுமைகளை பல ஆண்டுகளாகக் கண்டும் காணாமல் இருந்தார்கள் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இதன் வரம்பு கடிதம், தந்தி, தொலைபேசி, ஸ்கைப் வழி, மொபைலில் குறுந்தகவல், இமெயில், வாட்ஸ்அப் என உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், பொறுமை இழந்த முஸ்லிம் பெண்கள் கடந்த ஐந்து வருடங்க ளாக எதிர்ப்பு குரல் கொடுக்கத் துவங்கினர். கடைநிலை தஞ்சமாக வேறு வழியின்றி அப்பெண்கள் நீதிமன்றப்படி ஏறிய பிறகு இந்த முத்தலாக் நடைமுறை அலசி ஆராயப்பட்டது. .
இதனிடையே முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மக்களவையில் நிறை வேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும் பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் இந்த சட்டமசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக முயற்சித்தது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதா வில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப் பட்டது.
ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது. எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறை வேற்ற மத்திய அரசு முடிவுசெய்தது.
இந்நிலையில்தான் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது. முத்தலாக் வழக்கில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம், முத்தலாக்கில் கணவன், மனைவி குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும், முத்தலாக் வழங்கியபின் கணவன்-மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம் ஆகிய மூன்று முக்கிய திருத்தங்களுடன் இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.



