புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர்!?

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர்!?

ம் நாட்டின் நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமை செயலகம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்திற்குக் கடந்த 2020 டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானபணிகள் நடந்து வந்த நிலையில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம், மார்ச் மாதம் திறக்கப்படும் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி, அந்த கட்டிடத்தில் நடக்கிறது என்வௌம் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் ராஜபாதை சீரமைப்பு மற்றும் துணை ஜனாதிபதி இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் ஆகிய புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. இதற்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சமீபத்தில் முடிவடைந்த குளிர்கால கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புதிய கட்டிடம் தயாராகவில்லை. இருப்பினும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அவ்வப்போது நேரில் பார்வையிட்டு வருகிறார். கட்டுமான பணி அதிக வேகத்தில் நடந்து வருவதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம், மார்ச் மாதம் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் , “கட்டுமான பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடைந்து விடும். மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி, புதிய கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக் குழுக்களுக்கான அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்தும் பகுதி ஆகியவை இடம்பெற்று இருக்கும். ” என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுவாக, பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக நடக்கும். முதல் பகுதி, ஜனவரி 30 அல்லது 31ந் தேதி, ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். பிப்ரவரி 1ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 8 அல்லது 9ந் தேதியுடன் முதல் பகுதி நிறைவடையும். மார்ச் மாதம் இரண்டாவது வாரம், பட்ஜெட் தொடரின் 2வது பகுதி தொடங்கி, மே மாதம் முதல் வாரம்வரை நடக்கும். அந்த 2-வது பகுதிதான், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் என்று தெரிகிறது.

error: Content is protected !!