தமிழ் குரல் / AI Voice
பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய திரைப்படம் “பாகமதி”. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. தேவசேனாவாக வந்து உலக சினிமா ரசிகர்களின் மனதைக் கட்டிப்போட்ட அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன் ஜெயராம், உன்னி முகுந்தன் மற்றும் ‘பாபநாசம்’ படத்தில் கமலுடன் நடித்த ஆஷா சரத் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன்’ – தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மிரட்டும் வகையில் இருந்த து. தமன் இசை யமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அத்துடன் இப்படத்தின் இசை, மற்றும் மந்த்ரா லிரிக்கல் வீடியோ-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அதுவும் ஹிட் ஆனது.
இந்நிலையில் வரும் 26ம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘பாகுமதி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, நேற்று அவர் சென்னை வந்தார். அப்போது நிருபர்களுக்கு அனுஷ்கா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


