அய்யே,, காவிரி மேலாண்மை அமைக்க உத்தரவிட உன்க்கு இன்னா ரைட்ஸ்?

அய்யே,, காவிரி மேலாண்மை அமைக்க  உத்தரவிட உன்க்கு இன்னா ரைட்ஸ்?

“காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் வரும் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களிலும் காவிரி நீர்ப்பாசனப் பகுதியை முழுமையாக ஆராய்ந்து வரும் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கெனவே மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதிகளை அறிவித்துவிட்ட நிலையில் கர்நாடகா இப்போதைக்கு பிரதிநிதியை அறிவிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

court oct 3

இந்நிலையில், மேலாண்மை வாரியத்தை 3 நாட்களுக்குள் அமைக்குமாறு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இன்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதோடு, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்தது.

மத்திய அரசின் இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

Related Posts