ஆசிய விளையாட்டுப் போட்டி ; குதிரை ஏற்ற விளையாட்டில் தங்கம் வென்று, இந்திய அணி சாதனை !

ஆசிய விளையாட்டுப் போட்டி ; குதிரை ஏற்ற விளையாட்டில் தங்கம் வென்று, இந்திய அணி சாதனை !

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவிலிருந்து பல்வேறு பிரிவுகளில் பங்கேற்பதற்காக வீரர், வீராங்கனைகள் சீனாவிற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் ஈக்வஸ்டேரியன் என்ற குதிரையேற்ற விளையாட்டின் டிரஸ்ஸாஜ் அணி பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

திவ்ய கீர்த்தி சிங், சுதிப்தி ஹஜிலா, ஹிருதய் விபுல் சத்தா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றுள்ளனர். இந்த பிரிவில் இரண்டாம் இடத்தை சீனாவும், மூன்றாம் இடத்தை ஹாங்காங் அணியினரும் பிடித்தனர். கடந்த 1982 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரை ஏற்றத்தில் இந்தியா தங்கம் வென்று இருந்தது.

அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பதிவிட்டுள்ளார்.

கடந்த 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் முதன் முறையாக குதிரையேற்றம் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற அப்போட்டியில், இந்திய அணி குதிரையேற்றத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தது. அப்போது, குதிரையேற்றத்தில் மட்டும் இந்திய அணி, 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை குவித்தது. அதன் பிறகு, தற்போது தான் இந்திய அணி தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!