இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் அப்ரன்டிஸ் வாய்ப்பு!

நமது நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்புடைய நிறுவனங்களில் ஐ.ஓ.சி.எல்., எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கியமான நிறுவனமாகும். பெருமைக்குரிய இந்த பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் 1770 அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பயிற்சி விவரம்:
அ. டிரேடு அப்ரன்டிஸ்:
1.பிட்டர்: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. கெமிக்கல் பிளான்ட்/பாயிலர் ஆபரேட்டர்: கணிதம், இயற்பியல், வேதியியல், தொழில் வேதியியல் பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. அக்கவுன்டென்ட்: பி.காம். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆ. டெக்னீசியன் அப்ரன்டிஸ்:
1. காலியிடம் ஏற்பட்டுள்ள துறைகள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்.
2. தகுதி: சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
இ. டிரேட் அப்ரன்டிஸ் (பிரஷர்ஸ்):
- 1. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஈ. டிரேட் அப்ரன்டிஸ் (திறன் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்):
1. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதோடு ‘டொமஸ்டிக் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக’ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
2. வயது : 31.05.2025 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
3. உதவித் தொகை: இந்தியன் ஆயில் நிறுவன விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். கல்வித்தகுதி மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்த்தல், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஜூன் 16ம் தேதியன்று நேர்முகத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
டிரேட் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், டெக்னீசியன் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
02.06.2025.