போற போக்கு சரியில்லைப்பூ!- முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

போற போக்கு சரியில்லைப்பூ!- முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

ம் பாரத தேசம் , சிறுபான்மை மக்களுக்கு எதிரானது எனும் பிம்பம் இந்திய நிறுவனங்களையும், இந்திய பொருட்களுக்கான வெளிநாட்டு சந்தைகளையும் கடுமையாக பாதிக்கும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக மதம்சார்ந்த மோதல்கள் அதிகரித்துள்ளன. டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்தன. இதில் வாகனங்கள் தீவைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரச்சனையை தீர்க்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. மேலும், மதம் சார்ந்த மோதல்கள் தொடர்ந்தால் அது இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், சிகாகோவின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் பேராசிரியருமான ரகுராம் ராஜன் இந்தியாவின் சிறுபான்மை மக்கள் குறித்து பேசியுள்ளார். டைம்ஸ் நெட்வொர்க் இந்திய பொருளாதார மாநாட்டில் ரகுராம் ராஜன் பேசும்போது கூறியதாவது:–

இந்தியாவின் பலம் என்பது ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மை தான். இதுதான் நற்சான்றிதழாகவும் அறியப்படுகிறது. ஆனால் தற்போதைய மோதல்களால் நமக்கு தான் இழப்பு ஏற்படும். நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில அனைத்து மக்களையும் சமமான மரியாதையுடன் நடத்துவதாக இருந்தால், ஏழ்மையான நாடாக இருந்தாலும் அனுதாபம் கொண்டவர்களாக மாறுவோம். நுகர்வோர் நம் நாட்டை அணுகுவர்.

இதன்மூலம் வெளிநாடுகளுகில் உள்ள சந்தைகள் வளரும். ஒரு நாடு, நல்ல நட்பு நாடா, இல்லையா என்பது நுகர்வோர்களான மக்களின் செயல்பாடு மட்டுமின்றி நாடுகளுக்கு இடையேயான சர்வதேச உறவுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இது சிறுபான்மை மக்களை கையாளும் வகையையும் பொறுத்தது. இந்தியா சிறுபான்மை மக்களுக்கு எதிரானது எனும் பிம்பம் கட்டமைக்கப்பட்டால், அது இந்திய நிறுவனங்களையும், இந்திய பொருட்களுக்கான வெளிநாட்டு சந்தைகளையும் பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.