அமெரிக்காவில் தொடரும் கலவரம் ; இன்னொரு கருப்பின இளைஞர் கொலை!

அமெரிக்காவில் தொடரும் கலவரம் ; இன்னொரு கருப்பின இளைஞர் கொலை!

இப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக அமெரிக்காவில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது. எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றிய கதையாக இன்னொரு கருப்பின இளைஞரும் வெள்ளையின போலீஸால் சுட்டுக் கொல்லப்பட மீண்டும் அமெரிக்காவில் போராட்டங்கள் வலுவாகியிருக்கின்றன. ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரில் ஓரிடத்தில் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டின் வெளியே கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு அதன் உள்ளே தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறார் Rayshard Brooks என்னும் 27 வயதுடைய கருப்பின இளைஞர்.

Garrett Rolfe and Devin Bronsan என்னும் இரண்டு காவலர்கள் புரூக்ஸை தட்டி எழுப்பி விசாரித்திருக்கிறார்கள். கடைக்கு சாப்பிட வந்தேன்.. அப்படியே தூங்கிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார் அவர்.

அவருடைய காரில் ஆயுதங்கள் உள்ளதா என்று சோதனையிட்டிருக்கிறார்கள். எதுவும் இல்லையாம். குடித்திருக்கிறாரா என்று சோதனை செய்திருக்கிறார். சோதனையில் குடித்திருப்பது தெரிய வந்ததால் அவரை கைது செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

வழக்கம்போல் புரூக்ஸின் கைகளை பின்னால் இழுத்து கை விலங்கினை போடும்போது ஏதோ ஒரு காரணத்தினால் புரூக்ஸ் அதற்கு உடன்படாமல் முரண்பட்டு அவர்களுடன் சண்டையிட்டிருக்கிறார்.

போலீஸார் புரூக்ஸை தாக்க.. புரூக்ஸும் அவர்களைத் திருப்பித் தாக்கிவிட்டு தப்பியோடி யிருக்கிறார். அவரைத் துரத்திச் சென்ற Garrett Rolfe என்ற காவலர் தனது துப்பாக்கியார் புரூக்ஸை சுட.. ஸ்பாட்டிலேயே அவர் இறந்துவிட்டாராம்.

விஷயம்.. வெளியில் தெரிய வர.. அந்த இரவிலேயே நூற்றுக்கணக்கான கருப்பர் இனத்தவர் ரோட்டுக்கு வந்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கோபத்தில் அந்த ரெஸ்ட்டாரெண்ட்டையே தீ வைத்து கொளுத்திவிட்டார்கள்.

இன்று காலையில் இருந்து அட்லாண்டாவில் போராட்டம் தொடர.. போதும் என்று நினைத்திருந்த மற்ற மாகாண மக்களையும் இந்தக் கொலை தொடர்வோம் போராட்டத்தை என்று கூவ வைத்திருக்கிறது..!

கொலை செய்த போலீஸ்காரர் Garrett Rolfe உடனடியாக வேலையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். உடன் இருந்த மற்றொரு போலீஸ்காரர் நிர்வாகப் பதவிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

விஷயம் தீவிரமானதை அடுத்து அந்த நகரின் தலைமை காவல்துறை அதிகாரியாக இருந்த Erika Shields என்னும் பெண்மணி தான் ராஜினாமா செய்வதாகச் சொல்லிவிட்டார்.

இறந்துபோன புரூக்ஸுக்கு 4 குழந்தைகளாம். பாவம்.. ஒரு சாதாரண விஷத்துக்கெல்லாம் எதற்காக அரெஸ்ட், கை விலங்கு போடுவது என்று கடுமை காட்டுகிறீர்கள் என்று அமெரிக்கா முழுவதுமே இப்போது கேள்விகள் எழுந்துள்ளன..!

  1. சாதாரணமான, எளிமையான மனிதர்கள் வாழவே தகுதியில்லாத நாடு அமெரிக்கா என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..!

Related Posts

error: Content is protected !!