கனடாவில் இன்னொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

கனடாவில் இன்னொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

னடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் 2017ல் இந்தியாவில் இருந்து தப்பி சென்று கனடாவில் தலைமறைவானவன்.

காலிஸ்தான் இயக்கத்தினர் மீது மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை தீவிரவாதிகளாக அறிவிக்கும் முடிவை மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி எடுத்தது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஹர்தீப் சிங் நிஜார் உட்பட 9 பேரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு. இவர்கள் பஞ்சாப் இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர தூண்டினர். காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. அந்த வகையில் நம் நாட்டி தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவனு மான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இடையில் இன்று மோதல் வெடித்துள்ளது. அப்போது பயங்கரவாதி சுக்தூல் சிங் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டான். 2017ல் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்த சுக்தூல் சிங்கை இந்தியாவின் என்.ஐ.ஏ அமைப்பு தேடி வந்தது. இந்த நிலையில் இன்று பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுக்தூல் சிங் 2017ல் போலி ஆவணம் மூலம் கனடா சென்றதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் என்பதும்  நேற்று முன்தினம் தான் இந்தியாவின் NIA இவரை தேடப்படும் நபராக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!