32°C
விளம்பரம்
Advertisement

அண்ணாதுரை – திரை விமர்சனம்!

admin சேலம் Published: December 4, 2017 3 நிமிட வாசிப்பு Updated: December 8, 2017 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இதிகாச கால கதையான இராமயணத்தில் வந்த ஒரே உருவம் கொண்ட இரண்டு கேரக்டர் ரோல் சினிமாவில் வந்த பிறகு ரசிகனை திருப்தி படுத்தவும் செய்துள்ளது. இம்சைப் படுத்தியும் உள்ளது. கூடவே நம் தமிழ் சினிமாவில் நடிக்கும் எல்லா ஹீரோக்களுக்கும் இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எக்கச்க்ககம். அதிலும் இந்த மாதிரி படங்களில் அண்ணன், தம்பி சிறு வயதிலேயே பிரிந்து சென்று விடுவார்கள், ஒரு கட்டத்தில் அண்ணன் இடத்தில் தம்பியும், தம்பி இடத்தில் அண்ணனும் சென்று ஆடும் கண்ணாமூச்சு கேம்தான் பெரும்பாலான இரட்டை வேட படங்களில் டெம்ப்ளைட் கதைகளாக இருக்கும். இது போன்ற டபுள் ரோலில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு, பிறகு பெரும்பாலும் ஹிட் படங்களை கொடுத்தது ரஜினி, கமல் தான். அந்த வரிசையில் இடம் பிடிக்க ஆசைப்பட்டு விஜய் ஆண்டனி தயாரித்து வழங்கிய படம்தான் அண்ணாதுரை.

டாஸ்மாக் பிரச்சாகரகாக இருக்கும் அண்ணாதுரை என்ற ஒரு கேரக்டரும் தம்பிதுரை என்ற பெயரில் உள்ள ஸ்கூல் வாத்தியாராக இன்னொரு ரோலிலும் (இரட்டைச் சகோதரர்களாம்) நடமாடிக் கொண்டிருப்பவர்தான் விஜய் அண்டனி. டாஸ்மாக் கஸ்டராமக இருப்பதற்கு காரணம் அண்ணாதுரையின் காதலி கண் முன் ஒரு விபத்தில் இறந்து போனதை மறக்க முடியாமல் போனதாம். அதே சமயம் அவர் ரொம்ப நல்லவராம் என்பதை சொல்ல ஓரிரு காட்சிகள் காட்டி நம்மை நம்ப வைக்கிறார்கள். ஆனாலும் கல்யாண்ம் பண்ணி குடியை விட முடிவெடுத்து கடைச் நாளில் சரக்கடிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தில் கொலையாளி ஆகி ஜெயிலுக்கு போய் சில வருஷங்கள் கழித்து ஊருக்கு வரும் போது ஸ்கூல் பிடி டீச்சரான தம்பியாகப்பட்ட தம்பிதுரை பக்கா ரவுடியாகி ஊரெல்லாம் வெட்டி ரத்தகளறி ஆக்கிக் கொண்டிருப்பதை நேரில் பார்த்து அதிர்கிறார். தம்பி ஏனிப்படி ரவுடி ஆனான் என்று விசாரித்து சரி செய்ய முயற்சிப்பதற்குள் தம்பியாண்டான் மீது ஷூட்டிங் ஆர்டர் பிறபிக்கப்பட்டு விட்டது.. அப்படி என்னாச்சு என்றும் அப்பாலே என்னாச்சு என்பதுதான் மிச்ச கதை.

அண்ணனை இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். தம்பிக்கோ உள்ளூரிலேயே திருமணம் முடிவாகிறது. இந்நிலையில் நண்பன் தொழில் தொடங்குவதற்காக (காளி வெங்கட்) வட்டிக்கு விடும் சேரன் ராஜிடம் கடன் வாங்கித் தருகிறார் அண்ணாதுரை. பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடி உருவாக, வருங்கால மாமனாரிடம் இருந்து தொகை யைப் பெற்று அண்ணன் வாங்கிய கடனை அடைக்கிறார் தம்பிதுரை.

இது நாள் வரை வந்த எக்கச்சக்கமான படங்களில் வந்த போன கதைக்களம், அதில் நம்பகத்தன்மையற்ற திரைக்கதைத் திருப்பங்கள், என்று அறிமுக இயக்குநர் ஜி.சீனிவாசன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சொத்தப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டபுள் ரோல் வேறுபாட்டைக் காட்ட ஒரு விஜய் ஆண்டனி தாடி வைத்துக்கொண்டும் மற்றொருவர் அது இல்லாமலும் வருவதாக மட்டும் காட்டி ரொம்ப புதுமை செய்துள்ள விஜய் ஆண்டனி ஆங்காங்கே கொஞ்சம் நடிப்பைக் காட்டி இதை ஈடு செய்ய முயன்று இருக்கிறார். மஹிமா, கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துள்ளார். மியூசி டைரக்டாரன விஜய் ஆண்டனி பாடல்கள் ஊஹூம் . பின்னணி இசை பரவாயில்லை. இதில் குறிப்பிடத்தக்க கேர்க்டரில் வரும் செந்தில்குமார் தனி கவனம் பெறுகிறார். நாயகியின் தந்தையாக வரும் அவர் ஊர் பெரிசுக்கே உண்டான் உடல் மொழியுடன் ரொம்ப அநாயசமாக தன் திறமையை வெளிப்படுத்தி சக பத்திரிகையாளர்கள் சகலரையும் அடடே சொல்ல வைத்துள்ளார்

ஆனாலும் ஆணானப் பட்ட அண்ணாதுரை என்ற பெயரில் இப்படி ஒரு மொக்கை படத்தை கொடுத்த ராதிகாவுக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே கொடுத்தே ஆக வேண்டும்

மார்க் 5 / 2.50

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்