இந்த ‘அந்த 7 நாட்கள்’ ஒரு சயின்ஸ் பிக்ஷ்ன் கதையாக்கும்!

இந்த ‘அந்த 7 நாட்கள்’ ஒரு சயின்ஸ் பிக்ஷ்ன் கதையாக்கும்!

பாக்யராஜின் திரைப்பயணத்தில் ‘அந்த ஏழு நாட்கள்’ ஒரு முக்கியமான வெற்றிப்படம். அதன் அபாரமான திரைக்கதைக்காகவும், குறிப்பாக ‘பண்பாட்டைக்குலைக்காத அந்த பரபரப்பான கிளைமாக்ஸிற்காகவும் அதிகம் பேசப்பட்டது.நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு விநோதமான சம்பவம்தான், இதன் திரைக்கதைக்கு அடிப்படை என்று தகவல் வெளியானதும்ினைவிருக்கும் . அப்பேர்பட்ட ‘அந்த 7 நாட்கள்’ தலைப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது. பாக்யராஜூடம் அசிஸ்டெண்டாக இருந்த சுந்தர் என்பவர் டைரக்ட் செய்துள்ள இந்த படத்தில் கே.பாக்யராஜும் ஒரு அமைச்சர் கேரக்டரில் நடித்திருக்கிறார். அதனால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய ‘அந்த 7 நாட்கள்’ படத்திற்கும், பாக்யராஜின் படத்திற்கும் எதாவது தொடர்பு இருக்குமா ? அல்லது அதன் ரீமேக்கா ? என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில், பழைய படத்திற்கும் தங்களது ‘அந்த 7 நாட்கள்’ படத்திற்கும் ஒரு சதவீதம் கூட சம்மந்தம் இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் டைரக்டர் எம்.சுந்தர், தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ், பெஸ்ட்காஸ்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டி.செல்வகுமார் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது டைரக்டர் சுந்தர் சொன்னது,

“நான் கே.பாக்யராஜ் சாரிடம்சொக்கத்தங்கம்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன், பிறகு அவருடைய டிவி சீரியல்களுக்கான கதை விவாதங்களில் பங்கேற்றேன். இந்த படத்தின் கதையை படமாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன், அப்போது தான் சார் கதை கேட்கும் தகவல் கிடைத்தது, அவரிடம் கதை சொன்னேன், அவருக்கு பிடித்திருந்ததால் இந்த படம் உருவானது.நான் இந்த கதையை எழுதி முடித்ததுமே, பாக்யராஜ் சாரிடம் பணியாற்றியதால், அவரது பட தலைப்புகளை பயன்படுத்த வேண்டும், என்று முடிவு செய்தேன். அதன்படி, ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ மற்றும் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்புகளை தேர்வு செய்தேன், பாக்யராஜ் சாரிடம் கதை சொல்லிவிட்டு, இந்த இரண்டு தலைப்புகளில் எதை கொடுத்தாலும் எனக்கு சம்மதம் என்றேன், அவர் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்பு சரியாக இருக்கும் என்றார். அதேபோல் தயாரிப்பாளரும் இந்த தலைப்பு கதைக்கு சரியாக இருக்கும் என்றதால், இதை தேர்வு செய்தேன். ஆனால் பாக்யராஜ் சார் படத்திற்கும், எனது ‘அந்த 7 நாட்கள்’ படத்திற்கும் கதை உள்ளிட்ட எந்த விசயத்திலும் ஒரு சதவீதம் கூட சம்மந்தம் இருக்காது. ஆனால், இந்த தலைப்பு என் கதைக்கு மிக பொருத்தமான தலைப்பு. காரணம், படத்தில் 7 நாட்களுக்குள் ஒரு விசயத்தை செய்து முடிக்க கூடிய கெடு ஹீரோவுக்கு இருக்கும், அது என்ன என்பது சஸ்பென்ஸ். அதே சமயம், இது திரில்லர் படம் இல்லை, முழுக்க முழுக்க காதல் கதை தான், அதில் திரில்லரை லேசாக சொல்லியிருப்பேன். நூறு வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும் ஒரு சூரிய கிரகணம் சில வருடங்களுக்கு முன்பு உருவானது. அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பின்னணியாக வைத்து தான் இந்த கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு சயின்ஸ் பிக்சன் என்று கூறலாம். அத்துடன் இளம் ஜோடி ஒன்றின் அழகான காதல் கதையும் இணைந்திருக்கிறது.

ஹீரோவாக நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று தேடிக் கொண்டிருந்தபோது சிலரை அழைத்து பார்த்தபோது சில பிளஸ், சில மைனஸ்கள் . இருந்தது. பின்னர் இன்ஸ்டாவில் தேடிய போது அஜிதேஜ் என்ற இளைஞர் கிடைத்தார் அவரை நேரில் அழைத்து நடித்துக் காட்ட சொன்னபோது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்.அவரை ஒப்பந்தம் செய்தோம். இவரது நிஜப் பெயர் வினித். பெஸ்ட் காஸ்ட் தயாரிப்பாளர் அவருக்கு அஜிதேஜ் என பெயர் மாற்றம் செய்தார். .

ஹீரோயின்்ரீசுவேதா. இவர் மலையாள வெப் சீரிஸ் நடித்திருக்கிறார். இவரையும் இன்ஸ்டாகிராமில் பார்த்து தான் தேர்வு செய்தோம். ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் கெமிஸ்ட்ரி பொருத்தமாக இருந்ததால் கதைக்கு ஜோடி பொருத்தமும் சரியாக அமைந்துவிட்டது. இப்படத்தில் கே. பாக்யராஜ் சாரும் முக்கிய வேடமுன்றில் நடிக்கிறார் அதாவது அமைச்சராக நடிக்கிறார். முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதியவர்கள் தான். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் மிக தெளிவாக இருந்தார். இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் என் மகன் தான். என் மகன் என்பதற்காக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அவருடைய திறமைக்காக தான் தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். படத்தை தயாரித்தோம், பணம் கொடுத்தோம் என்று இல்லாமல் கதை மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு என அனைத்திலும் தயாரிப்பாளர் இணைந்து செயல்பட்டார். முக்கியமாக புதியவர்களாக இருக்க வேண்டும், திறமையானவர்களாக இருக்க வேண்டும், என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பாளர் அனைவரையும் தேர்வு செய்தார், அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமை.” என்றார்.

தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் சொன்னது:

முதலில் எனக்கு படம் தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. டைரக்டர் சுந்தர் மகன் சச்சின் என்னை அடிக்கடி சந்திப்பார். அப்போது தனது அப்பா பற்றியும் என்னிடம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் படம் தயாரிக்கும் முடிவை திடீரென்று எடுத்தோம். அப்படி உருவான படம் தான் அந்த ஏழு நாட்கள். இப்படம் செப்டம்பர் 12ம் தேதியில் திரைக்கு வருகிறது. இனி தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபட பெஸ்ட் காஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேசமயம் மிகப்பெரிய பட்ஜெட் படம் தயாரிக்கும் எண்ணம் கிடையாது. திட்டமிட்டு மீடியம் பட்ஜெட்டில் தொடர்ந்து படங்கள் தயாரிப்போம். புதுமுக இயக்குனர்கள் டெக்னீஷன்கள், புதுமுக நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது முக்கிய நோக்கமாகவும். அதேசமயம் அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடிகைகளும் இந்த புது முகங்களுடன் இணைந்து நடிப்பார்கள். தற்போது மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறோம் அது பற்றி விரைவில் அறிவிப்போம். நல்ல கதைகள், திறமையாளர்கள் இருந்தால் எங்கள் நிறுவனத்தை அணுகலாம். தலைமை செயல் அதிகாரியை சந்தித்து கதைகள் கூறலாம். மக்கள் நல்ல படங்களுக்கு வரவேற்பு அளித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடித்தமான படங்களை தயாரித்தளிக்க உள்ளோம்.என்றார்.

சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். சச்சின் சுந்தர் இசையமைக்க, முத்தமிழன் ராமு படத்தொகுப்பு மற்றும் வி.எஃப்.எக்ஸ் பணிகளை கவனிக்கிறார். டி.கே.தினேஷ்குமார் கலை இயக்குநராக பணியாற்ற, மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

error: Content is protected !!